உன் நினைவே என் சுவாசமடி 16-20

அத்தியாயம்-16
தர்ஷனா சோர்ந்திருப்பதை பார்த்து வருத்தப்படுவான். அவளோடு சமாதானம் பேசுவான் மறுபடியும் எங்கயாவது போயிட்டு வந்தால் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும் இப்படியாகத்தான் தர்ஷனாவின் வாழ்க்கை இருந்தது. இதில் வேறு மோனலை நல்லதொரு பள்ளியில் சேர்த்தான்.
அதுவும் தர்ஷனாவிற்கு தலைவலிதான், எப்போவாவது பள்ளிக்கு சென்றுவந்தாள் அதற்கும் பிரச்சனை பண்ணுவான்.
நன்றாக உடை உடுத்தி தனியாக செல்ல அனுமதிக்க மாட்டான். எல்லாமே அவளுக்கு அவன் வாங்கிக் கொண்டு வந்திருவான் சானிடரி நாப்கின்ல இருந்து எதுவாக இருந்தாலும் .
குவார்டஸ்ஸில் அத்தனைபேரும் மராத்தியர்கள்தான். மோனலுக்கும் தர்ஷனாவிற்கும் பழகுவதற்கும் எளிதாக இருந்தது அதுவும் அவனில்லாத நேரத்தில் மட்டுமே.
ஒரு நாள் இப்படித்தான் ஒரு திருமணமாகத எஸ்.ஐ யிடம் குவார்டசில்
வைத்து பேசினாள் என்பதற்காக வீட்டிற்குள் வைத்து வெளியே கதவை பூட்டிச் சென்று விட்டான்.
அவன் வந்து கதவை திறக்கும் வரை வெளியே செல்லமுடியாது. சில நேரங்களில் மகளை வைத்துக்கொண்டு மௌனமாக கண்ணீர் வடிப்பாள். அவளுக்குத் தெரியும் அவள் இல்லையென்றாலும் அவனும் வாழமாட்டான்.
இப்போதெல்லாம் மறுபடியும் குடிக்க ஆரம்பித்துவிட்டான். எப்போதும் அவள் அவனின் அருகிலயே இருக்கவேண்டும் அவனிடம் மட்டுமே பேசவேண்டும் என்றால் அது சாத்தியமா..
மோனல்கூட இப்போது தகப்பனைப் பார்த்து மிரண்டுப்போவாள். சிறுபிள்ளைதான மறுபடியும் ஒட்டிக்கொள்வாள்.
அவனுக்கு வேறு நண்பர்களும் இங்கு கிடையாது. மனதில் இருப்பதை சொல்லவும் முடியாது.
தனியாக வந்தால் சந்தோசமாக இருக்கலாம் என்ற மனநிலை மாறி குடும்பத்தோடு இருந்திருந்தால் கூட பரவாயில்லை என்றே தோணுயது தர்ஷனாவிற்கு.
இங்க வந்து ஒரு வருசம் கழித்துதான் மும்பைக்கு சென்றார்கள்.
அதுவும் சுப்பையாவும் ராசத்தியும் அவனது ஸ்டேசனுக்கு அழைத்து பேசி பார்க்கனும்போல இருக்கு இந்த கண்பதிக்காவது வந்திட்டுப்போங்க என மிகவும் வருந்தி அழைத்த பின்பே மெதுவாக சொன்னான்.
ஊருக்குப்போக ரெடியாகி இருக்கும்போது தர்ஷனாவை அழைத்து அங்கு போனால் நம்ம விசயம் எதுவும் அம்மாகிட்ட சொல்லக்கூடாது என்று சொல்லியே அழைத்து சென்றான்.
ஊருக்கு சென்றதும் ராசாத்தி நிதானித்தவர் மோனலிடம் தனியாக கேட்டார். முகம் ஏன் வாடியிருக்கு என்று
இல்ல அத்தை அலைச்சல் என சொல்லியிருந்தாள்.
அங்க சென்றதும் அவனிடம் அனுமதி பெற்று ஒருநாள் மட்டும் அவளது அம்மாவையும் தம்பி தங்கைகளையும் பார்த்து வந்தாள். எப்போது சென்றாலும்
பணம் கொடுத்து உதவுவாள் அதற்கெல்லாம் அவன் தடை செய்யவில்லை அவள் அங்கு சென்று தங்ககூடாது அவனது கண்பார்வையில் மட்டுமே எங்கும் செல்லமுடியும்.
அதற்காகவாது அனுமதிக்கின்றானே என்று சென்றுவருவாள். மோனலுக்கும் தன் மாமன்களையும் சித்தியும் ரெம்ப பிடிக்கும். சரவணன் வீட்டினரைப்போல முரடாக இருக்கமாட்டார்கள் அதனால் என்னவோ.
அங்கு இருந்த பத்து நாளும் தர்ஷனாவிற்கு அவள் தாய்வீடு போக ஒரு நாள்தான் அனுமதி கிடைத்தது.
தர்ஷனாவின் தம்பிகள் இரண்டுபேரும், மோனலின் தாய்மாமன்களோ தினமும் வந்து மோனலை அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
தர்ஷனா பயந்தாலும் மோனல் தகப்பனின் தாடையைப்பிடித்து ப்ளீஸ்ப்பா என சொன்னாலே போதும்
சரவணன் அப்படியே உருகிவிடுவான்.
சரி போயிட்டுவா என சொல்வான். ஆயிரும் பத்திரம் சொல்வான்.
ராசாத்தி எவ்வளவோ கெஞ்சினார் பிள்ளை,மனைவியையும் இங்க விட்டுட்டு போ என. அவன் அசரவில்லை தன்னோடு திரும்பி அழைத்து சென்றான்.
நாசிக் சென்றதும் தர்ஷனாவின் உடல்நிலையில் மறுபடியும் மாற்றம் வர கண்டுகொண்டவள் கனவனுக்கு விவரம் சொல்லி மருத்துவமனைச் சென்று பரிசோதித்து இரண்டாவதாக கர்ப்பம் தரித்திருப்பதை உறுதி செய்தனர்.
சரவணனுக்கும் சரி தர்ஷனாவிற்கும் முதல் தடவை மாதிரி ரெம்ப பூரித்து போகவில்லை எனினும் சந்தோசமே.
இப்போது குடியை தெடரவில்லை எனினும் எப்பவாவது பார்டிகளில் அல்லது விழாவில் குடிப்பான். அந்தவரைக்கும் தர்ஷனாவிற்கு நிம்மதியே.
அவள் வயிற்றை தள்ளிக்கொண்டு அலையும்போது அவனது சந்தேகம் மட்டுப்பட்டிருக்கும். மனைவி எங்கும் செல்லமாட்டாள் என்ற எண்ணமோ, அதனாலோ என்னவோ குடும்பமும் ரெம்ப அமைதியாக கழிந்தது.
மோனலை வண்டியில வைத்து சுத்துவான். என்னக்கேட்டாலும் வாங்கிக் கொடுப்பான். தர்ஷானா மட்டும்தான் சிறை பறவை போல இருந்தாள். இந்த தடவை உடலில் ரெம்ப சோர்வை உணர்ந்தாள்.
அதை உணர்ந்தவன் மறுபடியும் மருத்துவமனை அழைத்துச் சென்று காண்பித்தான். மருத்துவர் சொல்லிவிட்டார் உடல்நிலை நன்றாக இருக்கின்றது என்றும் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருப்பதில் நல்ல சூழல் வேணும் என்று.
நல்ல சூழ்நிலைக்கு எங்கப்போக கனவன் சரியாக இருந்தால் போதுமே என்றுதான் தர்ஷனா மனதில் நினைத்தாள்.
அன்றிரவு தர்ஷனாவை தன் மடியில் இருத்தி கொண்டு பேசினான் என் மேல ரெம்ப கோவமா இருக்கியா.
தர்ஷனா ஒன்றும் சொல்லாம அமைதியா இருந்தாள் .
" நீ அமைதியா இருக்கறதைப் பார்த்தா
கோவம் அப்படித்தான. என்ன கல்யாணம் பண்ணினதுக்கு வருத்தப்படுறியா. நான் உன்னை ரெம்பக் காய்ப்படுத்துறன்னு புரியுது.
ஆனா என்னால சில நேரத்துல முடியலடி
நீ என்னவிட்டு போயிடுவேயோன்னு அப்படி உயிருக்குள்ள இருந்து ஒரு பயம் வருது. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் அப்படி நினைச்சாலே கண்ணெல்லாம் இருட்டிட்டு நெஞ்செல்லாம் படபடனு அடிக்குது. என்னைய என்னாலயே கட்டுப்படுத்த முடியல "
தர்ஷனா " அவனது கையை பிடித்துக்கொண்டு அவனது கைக்கு முத்தம் வைத்தவள் நீங்கதான எனக்கு எல்லாம் .உங்களத்தவிர நான் யாரையும் கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன். அன்னைக்கு வரமா இருந்திருந்தா கண்டிப்பா நான் உங்களத்தேடி வந்திருப்பேன் அதுவும் முடியலன்னா எதாவது செய்திட்டிருபேன் "
அவளது வாயை முடியவன் வயித்துல பிள்ளைய வச்சிட்டு என்ன பேச்சு பேசற.
என்னைய புரிஞ்சிக்கோ. இனி குடிக்காம இருக்க முயற்சி செய்றேன். உன்னை கஷ்டப்படுத்தாம இருக்க பாக்கறேன் சரியா என அவளையும் அவனது மனதினையும் சமாதானப்படுத்தி இருந்தான்.
ஏழாவது மாதத்தொடக்கத்தில் வீட்டினுள் சமையல் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது கதவு தட்டற சத்தம் கேட்டதும் திறந்து பார்த்சவளுக்கு சந்தோசம். அவளது அப்பாவும் அம்மாவும் வந்திருந்தனர் அவளைப் பார்ப்பதர்க்கு .
அவர்களை உபசரித்து வார்த்தையாடிக் கொண்டிருக்கும் போதுதான் சரவணன் வந்தான். அவர்களைப் பார்த்தும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அறைக்குள் சென்றான் தர்ஷனாதான் அவன் பின்னாடியே சென்று நின்றாள் அவள் முகத்தில் பயத்தின் ரேகை. பார்த்தவன்
" அப்பா ஸ்டேசனுக்கு போன் பண்ணிருந்தாங்க. எனக்கு எல்லாம் தெரியும் அப்பாகிட்டதான் அட்ரஸ் வாங்கிட்டு வந்திருக்காங்க. உனக்கு என்ன விருப்பம் " எனக்கேட்டான் .
அவள் நிதானித்து " உங்க விருப்பம். நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி இப்போ அவங்க உங்களுக்காகத்தான் காத்திருக்காங்க. வெளிய வந்து அந்த அழைப்பிதழை வாங்குங்க, எனக்காக " என்க.
உடைமாற்றி வந்து அவர்களின் முன்பு அமர்ந்தவனின் மடியில் ஓடிவந்து மோனல் அமர்ந்துக் கொண்டாள்.
தர்ஷனாவின் தாய் தகப்பன் அவர்களது இளைய மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுக்கவும் பெற்றுக் கொண்டு சாப்பிட்டு போகச்சொன்னான்.
அதுவே தர்ஷனாவுக்கு பெரிய விசயம் சந்தோசத்தோட தாய்தகப்பனைக் கவனித்து. அவர்களுக்கு எதுவும் பணத்தேவை எதுவம் இருக்கா என்ன எனக்கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டு பணம் கொடுத்தே வழியனுப்பினாள்.
அவர்களுக்குத் திருப்தி மகள் நல்லாயிருக்கா. மருமகன் நல்லா வச்சிருக்காங்க என அவளின் தலைமேல் கைவைத்து ஆசிர்வதித்து சென்றனர்.
அன்றையத்தினம் அவன் கேட்காமலயே அவனிடம் ஒன்றினாள் தர்ஷனா.
அடுத்த ஒருவாரம் கடந்து தங்கையின் திருணத்திற்கு செல்ல எல்லாம் தயார்செய்துக் கொண்டிருந்தாள்.
ஏற்கனவே சரவணன் அனுமதிக்கொடுத்திருந்தான் கல்யாணத்துக்கு போயிட்டு அடுத்த நாள் இங்க வந்திரனும் எனக்கு இப்போ வரமுடியாது என சொல்லியிருந்தான்.
இரயிலில் அனுப்பி வைத்தான். அவனுக்கும் மனசேயில்லை.வேற வழியில்லாம தனியா அனுப்பினான்.
இரயில் கிளம்புற வரைக்கும் சொன்னான். கவனம் மகளை கவனமா பார்த்துத்துக்கோ அங்க அப்பா கூப்பிட வருவாங்க. நாளைக்கழிச்சி இங்க வந்திரு நானும் கூப்பிட வந்திருவேன் என்று.
திட்டமிட்டவாறு வாழ்க்கை நகர்ந்தால் அது வாழ்க்கை இல்லையே.
தங்கையின் திருமணத்தில் ரெம்பவும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள். சரவணன்
குணம் மாறிட்டது எனவும், தாய் வீட்டு விசேஷம் என்பதாலும் அது அவளை இன்னும் அழகாக காண்பித்தது.
திருமணத்திற்கு ஒரு தொகை அவளிடம் கொடுத்து அனுப்பியிருந்தான்.அவளின் தங்கைக்கு பரிசு வாங்கிக்கொடுக்க. அதை தன் தாயின் கைகளில்கொடுத்தவள், தனது தங்கைக்கு தனது நகைகளில் ஒன்றைக் கொடுத்தாள். அவள் மனதிற்கு இப்பொழுது முழு திருப்தி.
எல்லாம் நல்லபடியாக முடிந்து அடுத்த நாள் கிளம்பும்போது ராசாத்திப் பிடித்துக் கொண்டார். ஒரு நாள்கூட நம்ம வீட்ல தங்காம போற என சொன்னவர் .
இன்னும் ஒருவாரத்துல ராஜபாண்டிக் குழந்தைக்கு பெயர் வச்சி இங்க கூட்டிட்டு வர்றோம் நீங்க இங்க இருங்க என்று சொல்லி மகனுக்கும் அழைத்து சொல்லிவிட்டார்.
ஒருவாரம் எப்படி சென்றது என்றே தெரியாது. தர்ஷனாவிற்கு சிறிதாக பயம் இருந்துக்கொண்டே இருந்தது. நாசிக் பேனதும் என்ன பிரச்சனை வரப்போகுதோ என்று.
பெயர்சூட்டும் விழா நன்றாக சென்றது. ரஞ்சிதாவிடம் பேசுவதேயில்லை. இப்போதும் அப்படியே நின்றுக்கொண்டாள் கனவன் வருவான் என எதிர்ப்பார்த்து இருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அடுத்த நாள் அவள் நாசிக் செல்ல வழியனுப்ப அவளது தம்பி இருவரும் அப்பா அம்மா எல்லோரும் வந்திருந்தனர் மோனல் அவர்களிடம் ஒட்டிக்கொண்டு தர்ஷனாவிடம்கூட வரவில்லை.அவளுக்கும் சரி அவளது குடும்பத்திற்கும் அவ்வளவு சந்தோசம்.
அவளது பெற்றோருக்கு அவளது நிறைவான வாழ்க்கை நினைத்து மகிழ்ச்சி.
இனி அவளைக் காணப்போவதில்லை என உள்ளுணர்வினால் வந்திருந்தனரோ என்னவோ.இரயில் கிளம்பியதும் தான் அவர்கள் திரும்பி வீட்டிற்கு சென்றனர்.
ஏற்கனவே ஸ்டேசனுக்கு அழைத்து சுப்பையா மருகள் அங்கு வருவதாக தகவல் சொல்லியிருந்தார்.
இரயில்வே ஸ்டேசன்ல இறங்கி சிறிது நேரம் காத்திருந்தவள் சரவணன் வராது போகவும் பிள்ளை வேற தூங்கிவிட்டாள், இனி காத்திருக்க முடியாது என்று டேக்ஸி பிடிச்சி வீட்டிற்கு சென்றாள்.
அங்கே சென்று பார்த்தாள் வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது..
உள்ளதான் இருக்காங்கப் போல என ரெம்ப நேரம் கதவை தட்டிப்பார்த்துவிட்டு வீட்டின் வெளிவரண்டாவில் அப்படியே அம்மாவும் பொண்ணும் படுத்துக்கொண்டனர்.
மதியம் வந்தது இரவு ஏழு மணியாகிட்டது. மகளுக்கு வைத்திருந்த பிஸ்கட்ஸ் இருந்தது அதை எடுத்து சாப்பிட்டு பசியாறினர்.
மெதுவாக கதவு திறக்கும் சத்தம் கேட்டு தர்ஷனாவும் மோனலும் திரும்பி பார்க்க சரவணன் வீட்டினுள் இருந்து வெளியே வந்தான் பார்த்தவுடனே தெரிந்தது நல்ல
தண்ணியடிச்சி போதையில் அவனால் ஒழுங்கா நிற்ககூட முடியல மோனல் ஓடிப்போயி அவன் காலைப்பிடித்து அப்பா என்று அழைக்கவும் தான் உணர்வு வந்து பார்த்தான்.
மகளை தன் கையில்
தூக்கிக்கொண்டான். மறுபடியும் உள்ளே சென்று அமர்ந்தவன் அப்படியே படுத்துக்கொண்டான்.
தர்ஷனாவிற்கு வீட்டினுள் செல்லும்போதே மதுவின் வாடை. மறுபடியுமா என நொந்தே போனாள் வீட்டை கழுவி சமையல் செய்துக் கொண்டிருந்தவளுக்கு சத்தம் கேட்டு எட்டி பார்க்க
சரவணன் வெளியே கிளம்பினான்.
தர்ஷனா ஓடிவந்து அவன் கைகளைப்பிடித்துக் கொண்டாள்.
அவன் அவளைத்தான் தீர்க்கமாக பார்த்தான். சமையல் பண்ணிட்டேன் சாப்பிடுங்க வெளிய போகவேண்டாம் என்று சொல்ல.
அவளை அறைந்திருந்தான் தன் கன்னத்தை பிடித்துக் கொண்டு அப்படியே அதிர்ச்சியில் நின்றாள்.
இப்போ என்னடி அக்கறை ஒருவாரமா நான் இருக்கனா செத்தனானு பார்த்தியா. நீ நல்ல மினிக்குகிட்டு எவன் கிடைப்பான்னு அழைஞ்சிட்டு வருவ. உனக்கு நான் காத்திருக்கனுமா, சொல்லித்தானடி அனுப்பினேன் அப்போ நான் உனக்கு முக்கியமில்லை அப்படித்தான்.
ஒருவாரமா குடிக்கிறேன்,இன்னும் குடிப்பேன் என சத்தம்போட அவள் அவனது வாயைப் பொத்தினாள்.
என்ன மச்சான் இதெல்லாம் நீங்கதான எனக்கு முக்கியம் என சொன்னவளைப் பார்த்து. உன்னத்தான்டி உயிரா நினச்சேன் ஆனா நீ அப்படியில்ல.
இனி உன்ன வெளியவிட்டாதான என அவளை இழுத்துச் சென்றவன் துணி வைக்கும் வார்ட் ட்ராப் திறந்து அதினுள் அவளைத் தள்ளி மூடிவிட்டு வெளிக்கதவையும் அடைத்துப்பூட்டி வெளியவே படுத்துக் கொண்டான்.
மோனல் வார்ட் ட்ராப்ல அம்மாவின் சத்தம் கேட்கவும், சிறுபிள்ளை பெரிய போராட்டத்திற்கு பின்னே அதன் கதவை திறக்கும் போதே குற்றுயிராய் வெளிய வந்து விழுந்தவளின் காலினூடே இரத்தம் வழிந்துக் கொண்டு மூச்சு விடாமல் உயிர் மூச்சிற்கு ஏங்கிக் கொண்டிருந்தாள்.
இதை சொல்லும்போதே மோனல் ஜெபாவின் சட்டையைப்பிடித்து " அம்மா எப்படி உயிருக்கு போராடினாங்கத் தெரியுமா நான் அவங்க கடைசி மூச்சு விடும் வரைக்கும் பார்த்தேன்.
அம்மாவ அந்த நேரத்துல ஆஸ்பத்திரில சேர்த்திருந்தாக்கூட காப்பாத்தியிருக்கலாம். நான் அழுத சத்தம் கூட அப்பாவிற்கு கேட்கல.
மோனல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் உடல்மொழி மாறிற்று.
ஜெபா கண்டுக் கொண்டவன் அவளைப் திருப்பி பார்க்க அவள் மூச்சுவிடக் திணறிக் கொண்டிருந்தாள்,
மோனல் இங்கப்பாரு இங்கப்பாரு ஒன்னுமில்லடா என அவள் கன்னங்களை தட்டியவன் உடனடியாக மருத்தவமனை ஆம்புலன்சிற்கு தகவல் சொல்ல, அவளுக்கு கை கால் உதறல் எடுத்து பிட்ஸ் வர ஆரம்பித்தது..
அவளை தன் கரங்களில் ஏந்திக்கொண்டு ஓடியவன் ஆம்பலன்சில் மோனலைக் கிடத்திவிட்டு தன் கரங்களைப் பார்க்க இரத்தம் . மோனலின் ஆடையையும் அது நனைத்திருந்தது.
அவனுக்கு புரிந்துவிட்டது இப்போதைய மோனலின் நிலை.ஜெபா தன் முகத்தில் அறைந்து கொண்டு அழுதான்.
அத்தியாயம்-17
மருத்துவமனையின் வராண்டாவில் தலையை இரு கையாலும் தாங்கி அநாதரவாக உட்கார்ந்திருந்தான்.
அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சந்தோசமாக ஆரம்பித்த நாள் இப்படியா முடியவேண்டும்.
அதைவிட மோனலின் நிலை பிள்ளையாவது அவ இருந்தாள் வேற பெத்துக்கலாம். அவளாவது குணமடையனும் என்று வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தான்.
கிட்டதட்ட இரண்டுமணி நேரம் கழித்துதான் டாக்டர் வெளியே வரவும்.
அவன் இருந்ததை பார்த்து அவருக்கே வருத்தமா இருந்தது அவன் தோள் தட்டிக்கூப்பிடவும் தான் உணர்வுக்கு வந்தவன் எழுந்து நின்றான்.
சாரி சார் கொஞ்சம் நிலைமை சீரியஸ்தான். அது அவங்க கர்ப்பபைய க்ளீன் பண்ணவேண்டிய சூழ்நிலை. ஏற்கனவே எல்லாமே முடிஞ்சிட்டு அதனாலதான். மன்னிக்கவும் இந்த சூழ்நிலை கஷ்டம்தான்.
கடவுள் உங்களுக்கு ஒன்ன எடுத்திட்டு இன்னொன்று குடுத்திருக்கார். அவங்கள காப்பாத்தறதுக்கே போராடிட்டோம் இது வயித்துல குழந்தைக்கு நாங்க முக்கியத்துவம் குடுக்க முடியல.
ஜெபா " கண்கள் கலங்கினாலும்.
இதுதான் நடக்கனும் என இருந்திருக்கு பரவாயில்லை என் மனைவியை போராடி காப்பத்திக் குடுத்ததுக்கே நன்றி சொல்லனும் உங்களுக்கு என கூறவும் அது எங்களோட கடமை சார் என சொன்னவர் டாக்டர் அவனிடம் கைக்குலுக்கி விடைப்பெற்றார்.
மணியைப் பார்த்தான் மணி அதிகாலை நான்கை காட்டியது. அப்படியே சென்று ஐ.சி.யூ.வின் வின்டோ வழியாக அவளைப் பார்த்தான்.மருத்துவ உபகரணங்களால் இணைக்கப்பட்டு
குற்றுயுராக கிடந்தவளைப் பார்த்து
உடைந்துப் போனான் தீரன் அவன் உதிரமும் அல்லவா கலைந்துப் போயிற்று.
அவனுக்கு எதுவுமே ஓடவில்லை. அப்படியே மறுபடியும் அதே இடத்தில் வந்து அமர்ந்து இருட்டை வெறித்திருந்தான்.
இவ்வளவு வலியையும் இத்தனை வருசமா மனசுக்குள்ளே வச்சிருக்கா இன்னும் என்னென்ன மனசுக்குள்ள இருக்கோ இதுக்கே இந்த நிலைமை.
தனிமையில எவ்வளவு துடிச்சிருப்பா.
பாரதிகிட்ட இன்னமும் கவுன்சிலிங்க் குடுத்திருக்கலாமோ என்று காலங்கடந்து சிந்திச்சான்.
அதற்குள்ளாக வீட்டிலிருந்து அவனின் அப்பா அழைக்கவும் போன் எடுத்து பேசியவன் நீங்களும் அம்மவும் மட்டும் வாங்க. வேற யாரும் வரவேண்டாம் என்று இங்க உள்ள நிலைமையையும் சொல்லிவிட்டான்.
ஆனந்தராஜிக்கு மனது கஷ்டமா போச்சிது மகனுக்கு என்ன ஆறுதல் வார்த்தைகள் கூறமுடியும் அப்படியே அழைப்பை துண்டித்துவிட்டார்.
அமைதியாக அமர்ந்தவரிடம் அனுராதா வந்துக்கேட்டார் மகன் என்ன சொன்னான் என்று.
அவரும் நடந்தவற்றை கூறி கிளம்பவும் சாரதாவும் நானும் வர்றேன் என கிளம்பிவிட்டார்.
திரும்வும் டாக்டரிடம் சென்று விசாரித்தான். எப்போ நினைவுவரும்
என்ன ஏது என்று.
டாக்டர் " நினைவு திரும்ப எப்படியும் நாளைக்கு ஆகிடும். குறைஞ்சது மூன்று நாளாவது ஐ.சி.யூ.ல இருக்கனும்.
அதுக்கு அப்புறம் உடல்நிலை எப்படி என்று பார்த்துதான் சொல்லமுடியும் " என்றார்.
டாக்டர் " சார் நீங்க இப்படியே இங்கயிருந்தா எப்படி. உங்க ட்ரஸ் பாருங்க இன்னும் இரத்தமா இருக்கு.
நீங்க வீட்டுக்கு போயிட்டு வாங்க. உங்க
மனைவிய நாங்க பாத்துக்குறோம் "
ஜெபா " நன்றி கொஞ்சநேரம் இருந்திட்டு வீட்டுக்கு போகனும் "என அங்கிருந்து வெளியே வந்தவன்.
அவனின் ட்ரைவருக்கு அழைத்து வண்டிக் கொண்டு வரச்சொன்னவன்.
வீட்டிற்கு சென்றான் அங்கு தீதி வந்திருக்க அவர்களிடம் விசயத்தை சொல்லி,பெரியவங்களுக்காக சமைக்க சொல்லிவிட்டு குளித்து உடைமாற்றி ஒருமணி நேரத்தில் மறுபடியுமாக தன் மனைவியிடம் வந்தான்.
திரும்பவும் அதே நிலையில்தான் இருந்தான். ஒரு ஒரு வருசத்தக்கு முன்னாடி யாராவது நீ ஒரு பொண்ணுக்காக இப்படி இருப்பன்னு சொன்ன கேவலமா சிரிச்சிருப்பான்.
இப்போதைய நிலை வேற யாருக்கும் வரக்கூடாது என நினைத்தான்.
பிள்ளைக்காக கனவு கண்டவன் அது இல்லை. மனைவியும் அரை உயிராக
நான் ரெம்ப பாவம் பண்ணிட்டனோ என பலவித சிந்தனையில் இருந்தவனைக் கலைத்தது. மறுபடியும் அவன் மொபைலின் ஒலி , எடுத்துப் பார்த்தான் அவனின் டிபார்ட்மென்டிலிருந்து எடுத்து பேசியவன்.
பெருமூச்சொன்றை விட்டு அமர்ந்தான்.
கார்த்திக்கேயன் என்கவுண்டர் கேசின்
விசாரனை. எந்த நேரத்துல கூப்பிடுறாங்க பாரு என கோபப்பட்டான்
மறுபடியும் சிகரெட் தேவைப்பட்டது அவனுக்கு ட்ரைவரை அழைத்து டீ வாங்கி வரச்சொன்னவன் குடித்துவிட்டு,வெளியே சென்று சிகரட் புகைக்கவும்,அதுவும் அவனை சமன்படுத்வில்லை தூக்கியெறிந்தவன். நடந்து சமன்பட முயற்ச்சித்தான் எதுவும் அவனுக்கு கைகொடுக்கவில்லை.
டாக்டரிடம் சென்று மனைவியின் பக்கத்துல இருக்கனும் அனுமதி கொடுங்க என நிற்க.
அவர்களுக்குமே யோசனை அப்படி யாரும் உள்ளே போக அனுமதியில்லை
அவனின் பதவிக்காக அனுமதித்தனர்.
அதுவும் கொஞ்ச நேரம்தான் என்று சொல்லி அனுப்பினர்.
ஐ.சி.யூ. உள்ளே சென்று அவளின்
கைகளை பார்க்க ஊசி குத்தி வைத்திருந்தனர்.
கண்ணீர் விட்டு அழுதான் அக்னியை சுற்றிவர கை இருக்கி பிடிச்சதுக்கே அப்படி சிவந்து கன்றிப்போயிட்டு.
உடம்புல இப்போ எத்தனை ஊசித்தடங்கள்.
அவளது காலை மெதுவாக வருடி பிடித்துக்கொண்டான். கனவனின் தொடுகை உணர்ந்தாளோ என்னவோ மூச்சை வேகமாக இழுத்துவிட்டாள்.
அப்படியே அமர்ந்திருந்தான். தொட்டால் வலிக்குமோ என பார்த்திருந்தான்.
நர்ஸ் வந்து அவளுக்கு மருந்து செலுத்துவதை பார்க்க முடியாமல் வெளியேறினான் முகத்தை அழுந்த துடைத்து அமர்ந்திருந்தான்.
மதியம்போல அவனது மோபைலுக்கு அழைப்பு வர பேசியது ஆனந்தராஜ்.
ட்ரைவரை அழைத்து அவனின் குடும்பத்தை
அழைத்துவர அனுப்பி வைத்தான்.
அவர்கள் நேரடியாகவே மருத்துவமனைக்கே வந்துவிட்டனர்.ஜெபாவின் கைபிடித்து இரண்டு தாயும் அமர்ந்து விட்டனர். வேறு என்ன ஆறுதல் சொல்லமுடியும் இழப்பின் வலி பெரியது.
அவனின் குடும்பம் பக்கத்தில் வந்ததும் கொஞ்சம் தெளிவுபெற்றான் அவர்களில் ஆனந்தராஜை மட்டும் அங்கு இருக்க சொல்லிவிட்டு.பெண்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு தானும் யூனிபார்ம் மாற்றி வெளியில் வரவும் நியாபகம் வந்தது அன்று ஒரு நாள் அவனின் உடையைப் பார்த்து பயந்தது..
அவங்கப்பா போலிஸ் அதனாலயா இல்ல இதுக்கு பின்னாடி எதுவும் இருக்கோ என்ன என்று சிந்தித்தவன்.
கண்டிப்பா அவளுக்கு இதிலிருந்து வெளியவர எதாவது செய்யனும் . இல்லனா மனழுத்தம் அதிகமாயிடும்
என முடிவு செய்து டிபார்ட்மென்டிற்கு சென்றான்.
அவனும் விசாரனை கமிசன் மீட்டிங்க், எல்லாம் முடித்து வர சாயங்காலம் ஆகிவிட்டது. இன்னும்
அவள் கண்விழிக்கவில்லை.
இரவு தான் மோனலுக்கு விழிப்பு வந்தது
அதுவும் அரைமயக்கத்திலயே கண்களை மூடி திறக்கவும்,யாரும் அவளை சிரமபடுத்தவில்லை அருகில் சென்று.
அடுத்த நாள் காலையில் தான் நன்றாக கண் திறந்து பார்த்து கனவனைத் தேடினாள். இதுப்பார்த்த நர்ஸ் தான் ஜெபாவை மட்டும் உள்ளே அழைத்தார்.
அவன் உள்ளே செல்லவும் அவனைப்பார்த்து கைகளை லேசாக அசைக்கவும் அதற்குள் அவன் அவளது கைகளைப் பற்றியிருந்தான்.
அவளது கண்களில் கண்ணீர் இரண்டுபக்கமுமாக வழிந்தோடியது அவனுக்குமே கண்ணீர் வந்தது.
அவன் அவளது கண்ணிரை துடைத்துவிட மறுபடியும் கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது,அவனைப்பார்த்து அழாதிங்க என தலையால் இடவலமாட்டி சொல்லவும் அப்படியே அவளது கழுத்தோடு புதைந்தான், சிறிதுநேரத்தில் தெளிந்தவன் " சீக்கிரம் குணமாகி எழும்பிவா உனக்காகத்தான் காத்திருக்கோம் " என சொல்லி வொளியே வந்தான். அதற்கு மேல் அவனால் அவளை அப்படி பார்க்க முடியவில்லை.
முன்று நாள் கழித்து நார்மல் பெட்டுக்கு மாத்தியிருந்தனர். சாப்பிடவே பெரும் போராட்டம் அவளுக்கு. அனுராதா பக்கத்தில் இருப்பார் ஆனாலும் சாப்பிடமாட்டா ஏதோ யோசனையிலயே இருப்பாள்.
ஜெபா வந்தா குனிந்துக்கொண்டு அபபடியே இருப்பாள். இல்லனா கண்ணமூடி படுத்திருவா. அவனுக்குமே புரிந்தது.
அவளுக்கு குற்றவுணர்ச்சி குழந்தைமேல எவ்வளவு ஆசை வச்சிருந்தான்.
என்னாலதான் இப்படி ஆகிப்போச்சுது என.
அவளுக்குமே ஏன் கடவுள் என்கிட்ட இருந்து எல்லா உறவுகளையும் எடுத்துக்கறாரு என மனதில் ஆராய ஆரம்பித்தாள்.
ஒருவாரம் கடந்து வீட்டிற்கு அழைத்து வந்தாகிற்று. இன்னும் அவளால் தனியாக நடக்க முடியாது.வாஷ்ரூம் கூட அவளுக்கு அனுராதாவும்,சாரதாவும் உதவினர்.
மெதுவாக அவளது உடல்நிலை தேறிவர
அன்று ஜெபா ரெம்ப நேரங்கழித்துதான் வந்தான்
ஆனந்தராஜ் " ஏம்பா, இவ்வளவு நேரம்,மதியமும் சாப்பிட வரவில்லை. என்னாச்சி.எதுவும் பிரச்சனையா "
ஜெபா உடை மாற்றி வந்தவன் "ஆமாப்பா அந்த என்கவுண்டர் விசாரனை முடிஞ்சிட்டு. ட்ரான்ஸஃபர்
மறுபடியும் தமிழ்நாட்டில மதுரைக்கு
நல்லதா போச்சிது " என பேசியபடியே மனைவி இருந்த ரூமிற்குள் செல்ல
அவளின் அருகே சாரும்மா படுத்திருந்தார்.
அதைப்பார்த்ததும் லேசாக சிரித்தான்.
என் பக்கத்துல படுக்கறதவிட மாமியார் பக்கத்துல படுத்தாதான் தூக்கம்
வருது. அவனுமே உணர்ந்துகொண்டான்
அவள் தாயின் அரவணைப்பைத் தேடுகிறாள். இத புரியாம அவளைப் பார்த்து எத்தனை நாள் கேலி பேசிருக்கேன் என்று.
திரும்பி வந்தவன் பொற்றோரிடம் அமர்ந்து இன்னும் இரண்டு நாள்ல எல்லாம் இங்க ஒப்படைக்கனும். அதனால கொஞ்சம் வேலை அதிகம் லேட்டாதான் வருவேன். கொஞ்சம் இங்க இருக்கறத எல்லாம் பேக் பண்ணிடுங்க. மோனலைக்
கொஞ்சம் கவனமா பார்த்துக்காங்க.
எல்லாரும் சேர்ந்தே ஊருக்கு போகலாம் என்றான். எல்லா வேலைகளும் அதபோல நடக்க,மோனலை மறுபடியும் ஒரு நாள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனையும் முடித்து பயணம் செய்யலாம் என்ற பிறகே நிம்மதி.
அதுவும் ஜெபாவை டாக்டர் அழைத்து
அவங்க மனநிலைய மாத்துங்க. இல்லைனா மறுபடியும் இப்படியொரு சூழ்நிலை வர வாய்பிருக்கு என அவனுக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.
ஜெபாதான் தனியாக மருத்துவமனைக்கு
மோனலை அழைத்து வந்திருந்தான்.
வீட்டிற்கு திரும்பி வர்ற வழியில் அவளது கையைப்பிடித்து " நான் என்ன
தப்பு பண்ணினேன். என்கிட்ட பேசமாட்டுக்க " என அவள் கைககளைப் பிடித்து தன் கைகளில் பொத்திவைத்துக்
கொண்டான்.
அவள் அழத்தொடங்க இவனும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான்.
எல்லோரும் பிரயாணப்பட்டு நாகர்கோவில் வீட்டீற்கு வந்து சேர்ந்தாச்சு.
இங்கு வந்த பின்னும் மோனல் அனுராதகூடவே படுத்துக் கொள்வாள்.
ஜெபாவிற்கு இன்னும் பத்து நாளுக்கு மேலாக இருந்தது ட்யூட்டியில் சேருவதற்கு.
இரண்டுநாள் அமைதியாக இருந்தவன்
ஆனந்தராஜிடம் சென்று என்ன பேசினானோ.
மறுநாள் மோனலிடம் அனுராதா
" நீ உங்க ரூம்லபோயி படுத்துக்கடா இப்போ உடம்பு சரியியிட்டுப் பாரு " என அவளிடம் மெதுவாக கூறவும்
சரியென தலையசைத்து அவர்கள் ரூமிற்குள் நுழைய அங்கே கட்டிலில் இவள் வரவிற்காக காத்திருந்தவன் போல அவளையே பார்த்திருந்தான்.
அவள் மெதுவாக தலைகவிழ்ந்தபடியே வந்து கட்டிலின் ஓரத்தில் பட்டும்படாமலும் படுக்க. அவனுக்கு சுர்ரென்று கோபமேறியது ஆனாலும் இது கோபத்தை காண்பிக்கும் நேரமில்லை என உணர்ந்து .
அவளை சட்டென்று தன் பக்கம் திருப்பி அவன் மேல் படுக்கவைத்து இரு கைகளாலும் அவள் இறங்கிவிடாதபடி பூட்டிக்கொண்டான்.
அவ்வளவு தான் அவன் கண்களைப் பார்க்காமல் நெஞ்சில் முகத்தினை வைத்து ஏங்கியேங்கி அழ ஆரம்பித்தாள்.
அவனும் அவளது தலையை வருடிக்கொடுத்தான். கஷ்டம்தான் இப்படிபட்ட நிலையைக் கடந்து வருவது,
ஆனாலும் கடந்து வரவேண்டுமே. வேறு வழியில்லையே காலம் எல்லாவற்றையும்
மாற்றவல்லது. அப்போ ஏன் மோனலின் காயங்கள் மாறவில்லை.
அவள் தன் காயங்களை இப்போ வரைக்கும் கீறிக்கொண்டிருக்கிறாள் அதுதான் காரணம்.
" என்னாலதான இப்படி ஆச்சுது நீங்க எவ்வளவு ஆசையா இருத்தீங்க.
இப்போ என்ன பண்றது. இதுக்குத்தான்
நான் ஆரம்பத்துலயே சொன்னேன்
நான் உங்களுக்கு வேண்டாம்.
எனக்காக வர்ற எல்லா சொந்தமும் இல்லாமா போயிடுது "
ஜெபா " என்ன பேசுற அந்த குழந்தை நம்மகிட்ட வரனும்னு இருந்தா எதுவும் தடை வந்திருக்காது. அது நமக்குனு இல்ல அவ்வளவுதான் புரியுதா "
மோனல் " எனக்கு உங்கள நினைச்சும் பயம் அவன் கன்னங்களைத் தடவி எவ்வளவு கனவு குழந்தைய பற்றி "
ஜெபா " போனது போனதுதான் திரும்ப வராது உன்ன வருத்திக்காத.
உன்மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நீ வேண்டாதது எதையும் சிந்திக்காத " அப்படியே அவளை சமாதானப்படுத்தி தூங்க வச்சிருந்தான்.
காலையில் எழும்பி ரெடியாகி அவன் அவளுக்காக காத்திருக்க அனிஷா தன் குழந்தைகளுடன் மோனலைப் பார்க்க வந்திருந்தாள்.
அவளை பார்த்ததுதான் கட்டிப்பிடித்து ஒரே அழுகை...
அனிஷாதான் அவளை சமாதானபடுத்தினாள்.
சாராவிற்கு ரெம்ப பிடிச்ச அத்தைதான
மோனல் அவளிடம் ஒட்டிக்கொண்டே அலைந்தாள்.
அனிஷா " எங்கண்ணா கிளம்புனீங்க,நான் வந்து நீங்க வெளியப்போறத தடுத்திட்டனோ " என்க.
ஜெபா மோனலைப்பார்த்துவிட்டு தன்
தங்கைக்கு தலையாட்டினான் " உங்க வீட்டுக்குத்தான் கிளம்பினோம் நீயே வந்திட்ட " என்றான்.
அனிஷா மோனலிடம் தனியாக நிறையபேசி சமாதானபடுத்தி ,
அவளுக்கு பலவித ஆலோசனைகள் சொல்லியே சென்றாள்.
இப்படியாக அன்றைய நாளும் அமைதியாக கழிந்தது. அடுத்த நாள் ஜெபா மோனலோடு போய் நின்றது
மறுபடியுமாக பாரதியின் வீட்டிற்கு.
பாரதியின் பிள்ளைகளுக்கு மோனலைக் கண்டதும் ரெம்ப குஷி. முதல்தடவை வந்திருந்தபோது அவர்களோடு நன்கு ஒன்றியிருந்தாள். இப்போதும் பிள்ளைகளோடு சேர்ந்திருந்தாள். அதனால் ஜெபாவிற்கு பாரதியிடம் தனியாக பேசவாய்ப்பு கிட்டியது. மோனலைப் பற்றிய எல்லாத்தகவலும் பகிர்ந்திருந்தான்.
மனைவியை சரிப்படுத்த அது உதவியாக இருக்கும் என.
பாரதி மோனலை அழைத்து ஜெபா முன்னாடியே சில கேள்விகள் கேட்டு
அவளைத் தன்னோட வைப்ரேசனுக்கு கொண்டு வந்து
பாரதி " மோனல் உங்கப்பாவும் போலிஸாமே அப்படியா ஆச்சர்யம்.
உங்கப்பாவும் ஜெபா மாதிரியேன்னு
சொல்லு "
மோனல் " இல்லை ஜெபா மாதிரி ஒரு போலிஸ் அவ்வளவுதான். ஜெபா மாதிரி அவர் நல்ல கணவர் இல்லை எங்கம்மாவுக்கு."
பாரதி " ஓ அப்படியா "
மோனல் " ஜெபாவையும் எங்கப்பாவையும் ஒப்பிடாதிங்க ப்ளீஸ் "
பாரதி " சரி ஒப்பிட்டு பேசலை உங்கப்பா இப்போ எங்க இருக்காங்க "
மோனல் " இப்போவா அவர் அம்மா இறந்த மூன்று மாசத்துலயே
இறந்துட்டாரே "
அத்தியாயம்-18
மோனல் பாரதியிடம் பேசிக்கொண்டே
ஜெபாவை திரும்பிப் பார்த்தாள் அவன் அருகில் வந்து அவளை தனது தோள்களில் சாய்த்துக் கொண்டான்.
அது அவ்வளவு ஓவியமாக காட்சி அளிக்க பாரதி அந்த காட்சியை தன் மொபைலில் நிழற்படமாக பிடித்துக் கொண்டார்.
மோனல் சொல்ல ஆரம்பித்தாள்.
தர்ஷனாவின் உயிர் பிரியும் வரை அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்குத் தெரியவில்லை.
தர்ஷனாவின் கண்கள் மோனலைப் பார்த்தே நிலைக்குத்தி இருந்தது. இது எதுவும் அறியாத மோனல் அம்மாவின் மேல் சாய்ந்து அழுது அழுது அவள் மேலயே படுத்து தூங்கிவிட்டாள்.
விடிந்த பின்பு போதை தெளிந்த சரவணன் மெதுவாக வந்து கதவைத் திறந்து பார்த்தவன், இரத்த வெள்ளத்தில் தர்ஷனா உயிரில்லாத உடலாக இருந்ததைத்தான்.
அதை பார்த்தவன் தான் செய்த செயலின்
வீரியம் அறிந்தான். அப்படியே சரிந்து அமர்ந்தவன் தான் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதுவரை அவன் மூளைக்கு எட்டவில்லை. சரவணன் ஸ்டேசன் வரவில்லை என்றதும் அருகிலிருந்த ஒரு காவலர் வந்து பார்த்தபோதுதான் வெளியுலகிற்கு விசயம் தெரிந்தது.
போலிஸ் வந்து எல்லா காரியங்களையும் கையிலெடுத்து அவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் தகவல் அனுப்பினர்.
இரு குடும்பத்திலிருந்தும் வந்தனர் ராசாத்தி மோனலை அணைத்துக் கொண்டு அழுகை.
தர்ஷனாவின் உடலை போஸ்ட்மார்டம் செய்ய கொண்டு சென்றனர்.
உடனே சரவணனைக் கைது செய்திருந்தனர். அவன் பேசவே இல்லை
எங்கோ வெறித்திருந்தான்.
போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் தெளிவாக எழுதியிருந்தது. வயிறு பலமாக அழுத்தப்பட்டதால் குழந்தை வயிற்றிலயே இறந்து ,மிகமோசமான நிலையில் தர்ஷனா மரித்ததாக.
தர்ஸனாவின் உடலை மும்பைக் கொண்டு வந்தே எல்லாக்காரியத்தையும்
செய்தனர். தர்ஷனா வீட்டினர் ஒன்றுமே செய்ய இயலாத நிலையில்.
அவர்களின் சமூகத்தில் பெரியவர்கள் வந்து பேசினர் கேஸ் இன்னும் ஸ்ட்ராங்க் ஆக்குவதற்கு. அவர்கள் மகளே போயிட்டா இனி எங்க சார்பா கேஸ் குடுத்தா எங்கபொண்ணு திரும்பி வந்திடுவாளா அரசாங்கம் நடத்துறதே போதும் என்றுவிட்டனர்.
மோனல் சரவணன் வீட்டில்தான் இருந்தாள். சுப்பையாவும் ராசாத்தியும்தான் நன்றாக பார்த்துக் கொண்டனர். எத்தனை சொந்தங்கள் சுற்றி இருந்தாலும் அம்மா என்ற ஒரு சொந்தம் போதுமே.
இரவு நேரங்களிலில் எழுந்து மோனல் அம்மாவைத்தேடி அழுவாள். ஐந்து வயதுக்கூட நிரம்பாத பிள்ளை.
தாயின் அரவணைப்பும்,அவளின் வாசனையும்,அவளின் இளஞ்சூடான அணைப்பும் போதுமே அக்குழந்தைக்கு.
இனி அது அவளுக்கு கிடைக்க போவதில்லையே.
மோனலை அங்கயே பள்ளியில் சேர்த்திருந்தனர். அம்மாவின் சொந்தம் அவளை அடிக்கடி வந்து பார்த்துக் கொள்வர்.
சரியாக மூன்று மாதம் கழித்து சரவணனை ஜாமினில் வெளியே கொண்டுவந்திருந்தார் சுப்பையா.
எப்போதும் எதையோ வெறித்துக் கொண்டே இருந்த இடத்திலயே இருப்பான்.
சாப்பிடவேமாட்டான் ஒரு வாரமாக இப்படியே இருந்தான். ஜெயிலிலும் அப்படியே வெறும் எலும்புக்கூடாக இருந்தான்.
ஒரு நாள் இரவு ராசாத்தியிடம் வந்தவன்
அவரிடம் படுத்திருந்த மோனலை தூக்கினான். ராசாத்தி என்னயா என்று கேட்கவும் பிள்ளை ஒரு நாள் பக்கத்துல படுக்கவச்சிக்கட்டா எனக்கேட்கவும் யோசித்தவர். இல்லையா அது எப்படி உன்கிட்ட பிள்ளைய தருவேன் என யோசிக்கவும்.
" ம்மா நீயுமா இப்படி யோசிக்குறா.
உன் பிள்ளைமா நான் அது அப்படி ஆகும்னு கனவுலக்கூட நினைக்கலம்மா என அழுதவன் இன்னைக்கு ஒருநாள் மட்டும் பிள்ளையதாம்மா. அப்புறம் நீயே பிள்ளைய நல்ல வளர்த்துக்க பிள்ளைக்கு இப்படி ஒரு அப்பன் இருந்ததக்கூட சொல்லாதம்மா என அவரின் மடியில் தலை வைத்து அழுதான்.....
என்ன இருந்தாலும் பெற்றவள் அல்லவா
தனயனின் தலையைக் கோதிவிட்டு அவரும் அழுதார். தன் அறைக்கு, தூக்கத்திலயே மோனலை தோளில் எடுத்துக் கொண்டு போனான்.
பிள்ளையை முத்தமிட்டவன், அவளது அருகிலயே படுத்திருந்தான்,
அதிகாலை ஐந்து மணியிருக்கும் மோனலில் அழுகை வீட்டையே அதிர வைக்க எல்லோரும் அங்கு சென்று பார்க்க சுப்பையா அப்படியே நின்றார் அசையாமல் ,ராசாத்தி தன் தலையில் அடித்துக் கொண்டு மடங்கி தரையிலயே
விழுந்து அழுதார்,ராஜபாண்டிதான் ஓடிவந்து பார்த்து அருகில் சென்றான்
அவன் சரவணன் ஜாமினில் வந்ததும் அவன் நிலையறிந்து வீட்டிலயே அவனுக்கு துணையாக இருந்தான். இன்றுதான் பிள்ளையோடு இருக்கானே என்று கீழே சென்று படுத்தான்.
பக்கத்தில் சென்று தொட்டுப் பார்த்து உயிர் இருக்கா என்று பார்க்க அது எப்போதோ உடலைவிட்டு சென்றிருந்தது தன்னுடைய இணையைத் தேடி.
துரிதமாக செயல்பட்டு ஆம்புலன்ஸ்க்கு அழைத்தவன் பக்கத்திலும் இரண்டு மூன்று பேரை அழைத்தான். தனியாக உடலை இறக்க முடியாது என்று.
ராஜபாண்டி மிரண்டு அழும் மோனலை
கையில் ஏந்தியிருந்தான். அவள் உத்தரத்தில் அகோரமாக தொங்கிக் கொண்டிருக்கும் சரவணனின் உடலைப் பார்த்து பயந்து பயந்து அழுதாள்.
பிள்ளையை தோளில் போட்டு முகத்தை திருப்பினான்.
சரவணனின் உடல் இறக்கப்பட்டது அழகாக முகத்தின் தாடியெல்லாம் எடுத்தவிட்டு தர்ஷனாவிற்கு பிடித்தமான மீசை வைத்து தன்னோட எஸ்.ஐ யூனிபார்ம் போட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டான்.
எல்லாம் முடிந்தது காதல் இணைப்பறவைகளின் பூமியின் மீதான வாழ்க்கை அவசரவசரமாக முடிந்தது.
அவர்களின் வாழ்க்கைக்கு கிடைத்த பரிசான பிள்ளை மட்டும் அநாதையாக
அரவணைப்பற்ற நிலையில் அழுதுக்கொண்டிருந்தது.
சரவணனின் இறப்பிற்கு பின் சுப்பையாவும் ராசாத்தியும் முற்றிலுமாக தளர்ந்துப்போயினர்.
தொழில் எல்லாம் ராஜபாண்டியின் கையில் இப்போது. அவன் இங்கயே குடும்பமாக வந்துவிட்டான்.
ரஞ்சிதாவின் குணம் அப்படியேத்தான் இருந்தது சுப்பையா நிதானமாக யோசித்து தன் சொத்துகளை இரண்டாக பிரித்து ஒருபங்கு மோனலின் பெயரிலும் ,இன்னொன்று ராஜபாண்டியனின் பெயரிலும் எழுதினார். நகைகளில் பாதியை நாயகிக்கு கொடுத்தார் பாதியை மோனலிற்கு என்று எழுதி லாக்கரில் வைத்துவிட்டார்.
தர்ஷனாவின் தாய்தந்தையர் ஒரு நாள் வந்து சுப்பையாவிடம் பேசினர். உங்களால பார்க்க முடியலன்னா குழந்தைய எங்ககிட்ட குடுங்க என்று.
சுப்பையா மறுத்துவிட்டார் அவருக்குத் தெரியும் அங்கே வளர்ந்தாள் எப்படி வளருவாள் என்று.
ரஞ்சிதா சொத்து விசயங்கள் கேட்டதும் மொத்தமாக வெறுத்தாள் மோனலை.
பிள்ளையை எதாவது கரித்துப் பேசுவாள்.
ராஜபாண்டியன் மோனலை நன்றாக கவனித்துக் கொள்வான் என்ன வாங்கினாலும் அவளுக்கும் வாங்குவான்.
ஒரு நாள் ரஞ்சிதா அதற்கும் அவனிடம்
" ஏதோ உனக்கு பிறந்த குழந்தை மாதிரி பாத்துக்கற அதுதான் பாதி சொத்தையே எழுதி வச்சாச்சே. அப்புறமென்ன என் புருசன்கிட்ட ஒட்டி உறவு வருது என
அசிங்மாக பேச,இதையெல்லாம் கவனித்த சுப்பையா தன் பேத்தியை புனே நகரில் புகழ்பொற்ற ரெசிடென்சியல் பள்ளியில் சேர்த்துவிட்டார் எவ்வளவுக்கு எவ்வளவு செலவு பண்ணமுடியுமோ செய்தார்.
தனியாக தூங்கும்போது சரவணனின் கடைசி நேர அந்த அகோர போலிஸ் ட்ரஸ் உருவம் பயமுறுத்தும் எழும்பி அழுவாள்.
தேற்ற யாருமற்று அழுவாள் மெல்ல மெல்ல தன்னைத்தானே தேற்றியவள் விவரம் தெரிய தெரிய எல்லாவற்றையும்
உள்வாங்கிக் கொண்டு தன்னைத்தானே ஒடுக்கினாள். படிப்பில் தகப்பனைப்போல ஆர்வம் குணத்தில் தாயைப்போல பொருமை.
அவள் பெரிய மனுஷியாகி பருவமெய்ததைக்கூட யாருக்கும் சொல்லவில்லை ஹாஸ்டல் இருக்கறவங்களுக்கு மட்டுமே தெரியும்.
அங்கு அது பெரிய விசயமில்லை நம்ம தமிழ் நாட்டைப்போல அவர்கள் அந்த விசயங்களை கொண்டாடுவதில்லை.
மாசத்திற்கு ஒரு தடவையாவது ராசாத்தியும் , சுப்பையாவும் அவளை பார்க்க வந்துவிடுவர்.
இப்படியாக நாட்கள் செல்ல மோனலின் இருபதாம் வயதில் ராஜபாண்டி மாரடைப்பால் மரணமடைந்தார்.
அதற்கு சென்று வந்தாள் அதற்குபிறகு
பெரிய தம்பதியினர் முற்றிலுமாக உடைந்து போயினர்.
ஆறுமாதத்திற்கு ஒரு முறை ஆச்சி தாத்தவை பார்க்க வருவாள். அவள் வரும்போது மட்டும் சமையலுக்கு ஒரு ஆள் வைத்துவிடுவார் ராசாத்தி. ரஞ்சிதா
மோனலை எதுவும் சொல்லவும் அனுமதிக்க மாட்டார்.
ஆனாலும் ரஞ்சிதா எதாவது பிரச்சனை செய்வார். மோனல் கண்டுக்காமல் இருந்துவிடுவாள்.
சரவணன்-தர்ஷனாவின் அறை அப்படியே பாதுகாக்கப்பட்டது.பகலில் அங்கு சென்று இருப்பாள் அவளின் பெற்றோர் அங்கு இருப்பதாகவே உணர்வாள்.
சரவணனின் தகப்பன் அன்பு பொய்யில்லை. தன் மனைவியின் மீதான அதிகப்படியான காதல் ஒரு நொடியில் விபரீதமாகப் போயிற்று.
இரவு அந்த அறையில் படுக்கமாட்டாள்.
தன் தகப்பனின் நியாபகம் வந்துவிடும் என்று ராசாத்தியிடம் சென்றுவிடுவாள்.
அந்த அறை முழுவதும் சரவணன்- தர்ஷனாவின் வாசம்,அவர்களின் பொருட்களை நாசிக்ல இருந்து எடுத்து வந்திருந்தனர் ,அது முழுவதும் அங்கே நிறைந்திருக்கும்.
மோனல் ராசாத்தியைத் தவிர யாரும் அங்கு இருக்கமுடியாது. ரஞ்சிதா
நிறைய முயற்சி செய்தால் அந்த அறையை தன் பிள்ளைகளுக்கென்று ஒதுக்க, அது நடக்கவில்லை. அந்த அறையில் ஐந்து நிமிடத்திற்கு மேலாக அவர்களால் நிற்ககூட முடியாது.
இன்ஜினியரிங்க் முடித்து எம்.ஈ முதல் நாள் வகுப்பில் அமைதியாக இருந்தாள். அப்போதுதான் நம்ம தமிழ்
பெண் எனக்கு முந்தின பெஞ்சில் கொஞ்சம் பயந்தமாதிரி இருந்தாள்.
முதல் முதலா பார்த்த உடனே பேசனும்போல இருந்துச்சி.
யாருக்கிட்டயும் நான் அவ்வளவா பேசினதே இல்லை. அதற்கெல்லாம் சேர்த்துவச்சி அவாக்கிட்ட பேசினேன். அனிஷா என் உயிர்தோழி.அவா வந்தபிறகு எனக்காக கொஞ்சமா வாழ ஆரம்பித்தேன். அவக்கிட்ட என்னோட விசயங்கள் பகிர்ந்த்துப்பேன். கல்லூரி வாழ்க்கைய எப்படி ரசிக்கறது அப்படினு சொல்லிக்குடுத்தா. என்னோட லக்கி அவா. அவ பேசறது முக்காவாசி அவங்க குடும்பத்தை பற்றியதா இருக்கும்.
முக்கியமா ஜெபாவை பற்றிபேசும் போது
என்னையறியாமலயே ஆர்வம். முதல்ல பார்க்காமலயே ரெம்ப பிடிச்சிது. அப்பறம்
அவா போன்ல படம் வச்சிருந்தா அத எடுத்து என் மெயில்ல வச்சிருக்கேன் , இன்னும் இருக்கு என்கிட்ட அந்த போட்டோ. அப்படியே இப்போ அவரோட மனைவியாகியாச்சுது.
படிப்பு முடித்து அதே கல்லூரியில் வேலை அந்த நேரத்துல ஆச்சி தவறிட்டாங்க. அதுக்கு அப்புறம் தாத்தா நாயகி அத்தை விட்ல இருந்தாங்க. எங்க வீட்டை கீழமட்டும் வாடகைக்கு விட்டிருந்தனர். மேல அப்பா அம்மா அறை இப்பவும் பராமறிக்கிறோம்.
தாத்தாவ பார்க்க நாயகி அத்தைவீட்டிற்கு போவேன். அவங்கலாம் நம்மள வேண்டாத விருந்தாளியாகத்தான் பார்ப்பாங்க.
மச்சான்க இரண்டு பேரோட பார்வையே சரியிருக்காது.
நான் அங்க போனாப்போதும் பெரியவன் நான் வெளிய வர்றவரைக்கும் அங்கதான் இருப்பான். என்ன காலேஜ்ல கொண்டுவிடுறேன் சொல்லுவான் நான் அமைதியா வந்திருவேன். அவனப்பார்த்தாலே பயமா இருக்கும்.
அதனாலயே தாத்தா அத்தைவீட்டுக்கு வரவேண்டாமென தடுத்திட்டு. என்ன பாக்குறதுக்காக கார் புக் பண்ணி எனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கிட்டு வருவாங்க சாப்பிடுறதுக்காக.
தாத்தா என் கல்யாணத்திற்கு ஆறு மாசம் முன்புதான் இறந்திட்டாங்க.
தூக்கத்துலயே எனக்காகத்தான் உயிரை கையில பிடிச்சிட்டு வாழ்ந்தாரோ என்னவோ. என்ன நினைச்சே இரண்டுபேரும் மனசு கஷ்டப்பட்டிருப்பாங்க என் கல்யாணத்துக்கு நிறைய வரன் பார்த்தாங்க.ஆனால் விசாரித்துவிட்டு திரும்ப வரமாட்டாங்க கொலைகாரன் பொண்ணுல.
அப்போ எல்லாம் அப்பாவ நினைச்சிருக்கேன். கண்டிப்பா அப்பா இருந்திருந்தா என்ன நல்ல பாத்திருந்துப்பாங்க.
ஆனா அம்மா இல்லாம அப்பா அந்த மூன்று மாசம் வாழ்ந்ததே பெரிய விசயம்
என, நான் என் கனவரோட வாழ ஆரம்பித்த பிறகு புரிஞ்சது.
அப்பா ஒரு நல்ல காதலன் ஆனால் நல்ல கனவனா இல்ல, அவரோட வேலைய அவரு நேசிச்சாரு.
எல்லாத்தையும் விட தர்ஷனா என்ற பெண்ணை உயிரா காதலித்தவங்க அதைத்தாண்டி சிந்திக்காம இருந்திட்டாங்க அதுதான் அவரின் மிகப்பெரிய பலமும் பலவீனமும்.
ஆனா ஜெபா என்ன புரிந்து இதோட இரண்டு தரம் உங்ககிட்ட கூட்டிட்டு வந்து கவுன்சிலிங்க் தர்றாங்க.
அதனால ஜெபா எங்கப்பா மாதிரி இல்ல.
என பேசி தன் பேச்சை நிறுத்தினார்.
பாரதி சிரித்தவர் வெரி கிளவர் எப்போ கண்டு பிடிச்ச.
" அது லாஸ்ட் டைம் வரும்போதே .உங்க குட்டீஸ் சொன்னாங்க நீங்க சைக்கியர்டிஸ்ட்னு யூகிச்சேன் எனக்காக
இருக்குமோ என்று "
ஜெபாவின் முகத்தைப் பார்த்தாள் அவன் கண்களில் கண்ணீர் அவளின் முகத்தில் பட்டு விழுந்தது.
" மச்சான் " என அழைக்கவும் உணர்விற்கு வந்தவன்.
" எக்ஸ்கியூஸ் மீ " எனக்கேட்டு வெளியே சென்றுவிட்டான்.
மோனல் பாரதியிடம் பேசிக்கொண்டிருந்தாள். திரும்பி வந்தவன் இப்போது தன்னை திடப்படுத்தியிருந்தான். பாரதியிடம் அடுத்து என்ன பண்ணலாம் எனக்கேட்டு தொடர்ந்து ஒரு ஐந்து சிட்டிங்க்ஸ் வர சொன்னாங்க.
கார்லதான் அழைத்துச் சென்றான். பீச்க்கு போவோமா உனக்கு ஓகேவா என்று சம்மதம் கேட்டே அழைத்து சென்றான். அங்கு சென்றதும் மணலில் அமர்ந்தனர்
பொறுமையாக ரசித்து பார்த்தானர்.
அங்கு சிறுபிள்ளைகள் விளையாட ரசனையாக பார்த்திருந்தான்.
அதைப்பார்த்த மோனலுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. கண்டிப்பா ஒரு பாப்பா அவனுக்கு பெத்துக்குடுக்கனும் என எண்ணத்துவங்கினாள்.
எண்ணங்கள் ஈடேறினாள் நலமாக இருக்கும்..
திரும்ப வீடு சென்று சேர சாயங்காலம் ஆகிற்று. இப்படியாக ஒரு பத்து நாட்களுக்குள் அவளை ஓரளவு தேற்றியிருந்தான்.
மனநிலை மாற மாற உடல்நிலைத் தேறிவந்தது.
இங்கு அரவணைக்க இரண்டுத்தாயும்,
இரண்டுத் தகப்பனும் இருந்தனர்.
தம்பிக்கு தம்பியாக பிரேம்,அக்காவாக சுனிதா அவளுக்கு நல்ல ஒரு சூழல் கிடைத்தது.
மோனலின் மனம் ஜெபாவிடமே. இரவு மதுரைக்கு செல்லவேண்டும் என கிளம்பிக் கொண்டிருந்தான். மோனல் தான் அவனிடம்
கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
நானும் உங்க கூட வர்றேன் என்று.
அத்தியாயம்-19
மோனல் ஜெபாவையே சுத்தி சுத்தி வரவும்,அவளைப்பிடித்து நிறுத்தி என்னடி பண்ற எதாவது வேண்டுதலா என்னைய சுத்திவரனும்னு.
மோனல் லேசாக சினுங்கியவள்
" என்னையவும் கூட கூட்டிட்டு போங்க "
ஜெபா அவளைப்பிடித்து தன் மடியில் இருத்தி " உன் உடம்பு இன்னும் சரியாகல இப்படி ட்ரவல் பண்ணி ரிஸ்க் எடுக்க வேண்டாம். அப்புறம் நீ அங்க வந்தா தனியா இருக்கனும், இன்னும் நல்ல சரியான பிறகு நான் அங்க கூட்டிட்டு போவேனாம். அதுவும் இல்லாம அங்க வீடு எப்படி என்ன எல்லாம் பார்க்கனும்
இப்போ உன்ன அங்க அழைச்சிட்டுப் போறது கஷ்டம்டா "
சமாதான வார்தைகள் எதுவும் எடுபடல
முகத்தை உர்னு வச்சிருந்தா.
நேரா அனுராதாகிட்ட போனவ " அனும்மா என்ன கூட்டிட்டு போகச்சொல்லுங்க என்க "
அனுராதா " எங்கடா "
மோனல் " அய்யோ அனுமா அவங்க மதுரைக்கு போறாங்க..
என்ன கூட்டிட்டு போகமாட்டுக்காங்க "
அனுராதா " அவன் கூட்டிட்டு போறேன்னு சொன்னாக்கூட நான் விடமாட்டேன்டா. இபபோதான் எல்லா தத்தும் கழிஞ்சி எங்களுக்கு நல்லபடியா திரும்ப கிடைச்சிருக்க. உன் உடம்பு இன்னும் சரியாகல ,நீ இப்போதைக்கு
எங்கயும் போகக்கூடாது "
மோனலுக்கு அய்யோனு இருந்துச்சி, மீண்டுமாக தன் அறைக்கு வந்தவள் கட்டிலில் அமைதியாக அமர்ந்தாள்.
ஜெபா அவளையேத்தான் பார்த்து கொண்டிருந்தான். சின்ன பிள்ளைபோல
அம்மாகிட்ட போயி கம்ப்ளையின்ட் செய்திட்டு வர்றா என்று நினைத்தவன் எல்லாம் எடுத்துவைத்துவிட்டு அவளிடம் அருகில் வந்து அமர்ந்தான்.
அவள் அமைதியாக இருக்கவும் ஜெபாதான் அவளைத்தூக்கி மடியில் இருத்தி வைத்து என் டாலிக்கு என்ன கோபம் ஹான்.
" நீங்கதான் என்ன விட்டுட்டு போறீங்களே "
ஜெபா " அதுக்கான காரணமும் சொல்லிட்டேன். நீதான் புரிஞ்சிக்காம
கோவப்படுற "
" டாலி மச்சான் ஊருக்குபோறேன் நல்லபிள்ளையா அழாம வழியனுப்பி வைப்பியாம்,நானும் அங்கபோயி உன்ன ரெம்ப தேடத்தான் செய்வேன் சரியா, எப்போலாம் உன்ன பார்க்கனும்னு தோணுதோ வந்திடுறேன் சரியா, உனக்கும் பார்க்கனும்போல இருந்தாலும் வந்திர்றேன் என்ன " என்று அவளிடம் கேட்க.
மோனல் தனக்குள்ளே முனங்கினாள்
" தினமும் தான் பார்க்க தோணுது "
ஜெபா இப்போ நல்ல வாய்விட்டு சிரித்தான். வர வர என் டாலி என்னமா யோசிச்சு பேசறா என அவள் தலையை லேசாக பிடித்து ஆட்டினான்.
அவள் இப்போ அவனோட இன்னும் நோருங்கி அப்படியே நெஞ்சோடு சாய்ந்தாள் சிறிது நேரம் அப்படியே இருந்தவர்களை ,வெளிச்சத்தம் கலைத்தது.
அவளது கன்னங்களை வருடி யோகா கிளாஸ்க்கு ரெடி பண்ணிட்டேன். தினமும் போ, அப்புறமா உன்ன அப்பா கொண்டுவிட்டு கூட்டிட்டு வந்திருவாங்க.
அப்புறம் கராட்டே கிளாஸ் ஏற்பாடு பண்ணவா".
மோனல் " அது எதுக்கு நான் கராட்டால பிளாக் பெல்ட் , அதுக்கும் மனசு ஸ்ட்ராங்கிற்கும் சம்மந்தமே இல்ல "
ஜெபா " அப்படியா பார்டா எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்க வேற என்ன படிக்க போற "
" ஹான் , என் மச்சான படிக்கனும் முதல்ல "
ஜெபா விழித்தான் எப்பா எப்படி பேசுறா பாரு என.
யோகா கிளாஸ் போறேன் ,அப்பறமா குக்கிங்க் கிளாஸ் போகட்டா ...
ஜெபா குக்கிங்க் கிளாஸ்ஸா அவன் முகத்தின் ரியாக்சன் வச்சே கண்டுப்பிடிச்சிட்டா அவனுக்கு பிடிக்கல என.
ச்ச்.உங்களுக்கு பிடிக்கலைன்னா போகல.
அது இல்லடா டாலி ஏற்கனவே நீ சமையல் செய்து ஒரு மாசம் சாபபிட்ருக்கேன்டா அத நினைச்சி சொன்னேன்.
உனக்கு பிடிச்சிருக்குனா போ. கொஞ்சநாள்தான் அப்புறமா நீ வேலைக்குபோக ஏற்பாடு பண்றேன் சரியா. வீட்ல இருந்தா கண்டதையும் யோசிச்சிட்டிருப்ப....
அதுக்குதான் இந்த கிளாஸஸ் எல்லாம்.
அவனுக்கு நேரமாகவும் மெதுவாக அவளை கீழே இறக்க. எங்க மோனல் அவனை இறுக்கி பிடித்திருந்தாள்.
ஜெபா " நேரமாயிட்டுமா நாளைக்கு
காலையில ஜாயின் பண்ணனும். இப்போ கிளம்பினா சரியா இருக்கும் " என சொன்னவன். அவளது கன்னங்களில் முத்தம் வைத்து அவளது கைகைளை தன்னிடமிருந்து பிரித்துவிட்டான்.
அவனைப்பார்த்து தலையசைத்தவள் அவனுடனே வெளியவந்தாள். அவன் தன் தகப்பனாரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பி போய்விட்டான்.
கொஞ்சநேரம் அப்படியே நின்றவள் தன் அறைக்குள் வந்து முடங்கிவிட்டாள். கண்ணீர் தானாகவரவும் துடைத்துவிட்டு
அவர்களின் கல்யாண ஆல்பத்தை எடுத்து பார்த்து பார்த்து இருந்தாள் .
ஃபோட்டோக்களில் அவனை தொட்டு தொட்டு பார்த்தாள்.
எப்போது தூங்கினாள் என்றே தெரியாது. அனுராதா மெதுவாக உள்ளே வந்தவர் அவள் கையிலிருந்த ஆல்பத்தை எடுத்து ஒதுக்கி வைத்தவர் அங்கயே கீழே வேற பெட் போட்டு படுத்தார். ஜெபா எல்லா விசயத்தையும் பெற்றோரிடம் சொல்லியிருந்தான்.
அதிகாலையில் முழிப்பு வந்து பார்த்தவள் மாமியார் கீழே படுத்திருப்பதைப் பார்த்து இறங்கி வந்து அவரின் பக்கத்தில் வந்து படுத்து அவரின் மேல் கைபோட்டு படுத்துக்கொண்டாள்.
அவரும் அதை உணர்ந்தவர் அமைதியாக இருந்தார். எவ்வளவு பாசத்திற்கும் தாய்க்கும் ஏங்கியிருப்பாள் என்று புரிந்துக்கொண்டார்.
காலையில் எழும்பியதும் முதல் வேலையாக ஜெபாவிற்கு ஃபோனில் அழைத்துவிட்டாள். எப்போ போயி சேர்ந்தீங்க எங்க இருந்தீங்க என அவனிடம் மட்டுமே ஒரு மணி நேரம் பேசியிருப்பாள்.
சரியாக ஏழு மணிக்கு ஆனந்தராஜ் அவளை யோகா வகுப்பிற்கு அழைத்து
சென்றவர். அவளுக்காக காத்திருந்து அழைத்துவந்தார் .
இந்த சின்ன சின்ன விசயங்கள் கூட அவ்வளவு மகிழ்ச்சியைக்கொடுத்தது.
யோகா க்ளாஸ் முடிச்சிட்டு வரும்போது அனிஷாவிற்கு எப்படி சாக்லேட்ஸ் வாங்குவாறோ அப்படியே மோனலுக்கும் கிடைத்தது..
இப்படியாக நாட்கள் செல்ல அவளின் மனநிலை ரெம்ப ரெம்ப மாறியிருந்தது.
இதுதான் என்னோட குடும்பம் என்று உணர்ந்தாள்.
ஜெபா ஒரு மாதமாக ஊருக்கு வரவேயில்லை. அங்க போயி சார்ஜ் எடுத்ததும் அவனுக்கு தலைக்குமேல வேலை வரமுடியாத சூழ்நிலை .
எது எப்படியாக இருந்தாலும் இரவு அவளுக்கு அழைத்துவிடுவான்.
இப்போதெல்லாம் மோனல் நிறைய பேச ஆரம்பித்திருந்தாள் ஜெபா அதைக் கேட்டுக்கொண்டிருப்பான்.
அன்றைய நாள் தொடங்கி முடியறவரைக்கும் என்னென்ன நடந்தது என்று. இவள் என்ன செய்தாள் அவன் ஆண்ணனா ஜீவாவோட குட்டிப்பிள்ளைங்க என்ன சேட்டை செய்தாங்க என எல்லாத்தையும் பேசுவாள். அவனை தேடுறத மட்டும் சொல்லமாட்டா.
அவனும் அதுக்காகத்தான் காத்திருந்தான். காதலை இன்னும் மனசுக்குள்ளதான பூட்டுறா,வெளிப்படையா சொல்லட்டும் எனக் காத்திருந்தான்.
ஜெபாவிடம் கேட்காமலயே அனுராதவின் உதவியுடன் குக்கிங்க் கிளாஸ் தனியா போனாள்.
வீட்டுல வந்து செய்து பார்ப்பாள். அவனுக்கு சர்ப்ரைஸ் குடுக்கனுமாம்.
அதுமட்டுமல்ல தன் அம்மாவை நினைத்துக்கொள்வாள் தர்ஷனா எந்த சூழ்நிலையிலும் கனவருக்கும் மகளுக்கும் விதவிதமா சமையல் செய்து கொடுப்பாள். மராட்டிவகை சமையல் நன்றாக செய்வாள் அதனால மோனலுக்கும் ஆசை நம்மளுக்கு பாப்பா வந்தா நம்மளே சமைக்கனும் என்று அந்த வகையில் குழந்தையை எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.
அதுவே அவளுக்கு நல்ல மாற்றம்தான் ஆனாலும் ஒரு சிறு நெருடல் இன்னும் இருக்கு.
டாக்டர் பாரதி கண்டுபிடித்தாங்களோ இல்லையோ அதை ஜெபா சரியாக கணித்தான் அதன் விளைவே இந்த விலகியிருத்தால்.
ஆமா மோனல் தன் காதலை மறைத்ததற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.
அவள் பயந்தது சரவணனைப்போல தானும் இருந்திடுவமோ என்ற பயம் உண்டு. அதீத அன்பு மட்டுமல்ல சந்தேகமும் அவளுக்கு வந்திருமோ, ஜெபாவக் கஷ்டப்படுத்திடுவோமோ என இப்பவும் பயப்படுறா.
அவங்களத் தேடுறேன்னு சொன்னா தப்பா நினைச்சிப்பாங்களோ என எண்ணவோட்டங்கள் அடிக்கடி வந்துப்போகும். எல்லா சூழ்நிலையையும் எதிர்க்கொள்ளனும் என்ற தெளிவு இன்னும் வரவில்லை.
கொஞ்சம் தடுமாறியவள் மறுபடியுமாக சென்று நின்றது பாரதியிடம்தான்.
பாரதியிடம் பேசும்போது அவளுக்கு ஒரு நல்லதொரு எண்ண அலைகள் உணர்வதாள் அங்கு சென்றாள்.
குறிப்பாக ஜெபாவிற்கு தெரியாமலயே..
பாரதி " வாங்க மோனல், என்ன இந்தப்பக்கம் ,ஜெபா வரலையா நீங்க எப்படி தனியா வந்தீங்க. "
மோனல் " மச்சான் வரல நான் மட்டுந்தான் தனியா வந்தேன் ,
எனக்கு உங்க கிட்ட பேசனும்
சில விசயங்கள் மனச உறுத்திக்கிட்டே இருக்கு அதான் "
பாரதி " என்னப்பா இது , நீங்க நல்லா இருக்கீங்க மனசலவுளவுலயும், உடலளவுலயும் , உங்கள நீங்களே
சரியில்லனு நினைக்க கூடாது "
மோனல் " ம்ம,சரி "
பாரதி அவளுக்கு குடிக்க ஜூஸ் கொண்டுவந்துக் கொடுத்திட்டு பேச ஆரம்பித்தார்
" என்ன மனசுல இருக்கு இப்போ "
மோனல " அப்பா மாதிரியே நானும் மச்சானக் கஷ்டப்படுத்திடுவனோனு
பயமா இருக்கு , அவங்க பக்கத்துல இருக்கனும்போலவே இருக்கு,
அதுதான் நாள் போகப்போக அது அதிகமாயிட்டுனா அதான் வந்தேன் "
பாரதி " அப்படியா இத மட்டும் இப்போ ஜெபா கேட்கனும் , பறந்து வந்து உங்கள அப்படியே தூக்கிட்டுப் போயிடுவாரு " என சொல்லி சிரிக்கவும் மோனலுக்கு வெட்கமா போச்சுது. அவளின் நிறம் அப்படியே செந்நிறமாக மாறியது.
பாரதி " ஹப்பா வெக்கத்துக்கே உங்க கலர் மாறுதே ,போங்க ஜெபா லக்கி தான் , இப்படி ஒரு பொண்ணு மனைவியா கிடைச்சதுக்கு " என பேச்சை மாற்றினார் பாரதி.
ஜெபா உங்கள எவ்வளவு லவ் பண்றாரு
அவரு கண்ணு எங்க இருந்தாலும் உங்களத்தான் தேடுது. உங்க ரிசப்ஷன் அன்னைக்கே பார்த்தேன்பா.
மோனல் இன்னும் அதிகமாக சிவந்தாள்
ஜெபாவை நினைத்து.
பாரதி ஜெபா மோனலை எவ்வளவு தேடுறாங்க என சொல்லி அவளின் எண்ணப்போக்கை மாற்றினார்.
இணை இணையைத் தேடுவது குற்றமல்ல அதுதான் இயற்கை.
நிறையே பேசினார் பாரதி மோனலிடம்
அவள் ஓரளவு தெளிந்து வீட்டிற்கு வந்தாள்.
வந்ததும் ஜெபாவிற்கு அழைத்தாள் அவன் எடுக்கவில்லை. வேலையில் இருப்பாங்கப்போல என விட்டுவிட்டாள்.
மதியம் நல்ல தூங்கி எழும்பியவளுக்கு மனசு அவ்வளவு லேசாக இருந்தது .
மறுபடியும் ஜெபாவிற்கு ஃபோனில் அழைத்தாள் அழைப்பு எடுக்கபடவில்லை. கொஞ்சம் பயம் வந்தது , ஆனாலும் அவங்க எல்லாத்தையும் சமாளிப்பாங்க என்றிருந்தது. அவனோட வேலையை இப்போது சரியாக புரிந்திருந்தாள்.
இரவு சமையலுக்காக தயார் செய்துக் கொண்டிருந்த சுனிதா மற்றும் அனுராதா கிட்டபோய் நான் எதாவது சமைக்கட்டுமா என்று கேட்கவும் இருவரும் சிரித்துவிட்டனர்.
மோனல் " போங்க க்கா ,நானும் எதாவது சமைச்சாதான பழக முடியும், குக்கிங்க் கிளாஸ் போயி படிச்சத எங்க அப்ளை பண்ண இங்கதான பண்ண முடியும் "
அனுராதா " கொஞ்ச கொஞ்சமா பழகலாம் இப்போ எல்லாத்தையும் முடிச்சிட்டோம் நாளைக்கு சேர்ந்து செய்யலாம் " என்றதும் சமாதானமாகி அங்கயே பார்த்துக் கொண்டு நின்றாள்.
சுனிதா தான் பேச்சை தொடங்கினாள் ஜெபா தம்பிக்கு மீன் சமையல்னா ரெம்ப பிடிக்கும் அதனால முதல்ல அது பழகிக்கடா.
மோனல் அப்படியா ஆனா புனேல தீதி என்ன சமைச்சாலும் சாப்பிடுவாங்க
நானும் கொஞ்ச நாள் சமைச்சேனா
வெயிட் குறையிது சமைக்காதன்னு சொல்லிட்டாங்க என்க
சுனிதா சிரிப்பை அடக்க முடியாமல்
சிரித்தாள், மோனலின் முகம் மாறவும் அனுராதா அவளருகில் வந்து அவனுக்காக சமையல் கத்திட்டு சமைக்குற அதுவே பெரிய விசயம்டா, பக்கத்துலயே இருந்து சமையல் எல்லாம் தாய்மாருங்க சொல்லிக்குடுத்தும் கத்துக்காம இருக்காங்க, அனிஷாவப்பாரு தனியா புனே போனப்பிறகு தான் அறிவு வந்து சமையல் பண்ண ஆரம்பிச்சா.
ஜெபாதான் குடுத்துவைச்சிருக்கனும் என சொல்லவும் அவள் முகம் சந்தோசத்துக்கு மாறியது. சுனிதாவும் அப்படியே சொல்லவும் மூன்று பேரும்
வேலையெல்லாம் முடித்து சாப்பிட்டு,சிறிது நேரம் பிள்ளைகளோடு விளையாடிவிட்டு வந்து படுத்தவள் அனுராதா அவள் பக்கத்தில் வரவில்லை என்பதை கருத்தில் கொள்ளவில்லை.
மூன்றாவது முறையாக ஜெபாவிற்கு
அழைத்தாள் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மனசுக்குள் ஒரு தவிப்பு என்ன எப்பவும் இராத்திரி பேசிடுவாங்க ,இன்னைக்கு பேசவும் இல்லை நம்ம ஃபோன் பண்ணியும் எடுக்கலையே என அப்படியே தூங்கிப்போனாள் .
இரவு மணி பனிரெண்டை நெருங்கும் போது ,மோனல் தூக்கத்தில்,
அவளை அப்படியே ஒரு கரம் தூக்கியது அவள் மிரண்டு விழிக்க அவள் கண்களை இறுக முடி அப்படியே தூக்கிக்கொண்டு வீட்டின் ஹாலில் நிறுத்தவும் எல்லா விளக்கும் ஒளிர்ந்தது,
அவள் கண்களை விடுவிக்கவும் மணி பனிரெண்டு அவளின் முன்பு , அவளின்
படம் பதித்த பெரிய கேக் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று எழுதியிருந்தது. மோனல் நிமிர்ந்து பார்க்க ஜெபா அவளைப் பார்த்து கண்சிமிட்டினான்,
கேக் வெட்ட சொல்ல ஜீவா பிள்ளைகள் இரண்டு குட்டீஸ்க்கும் பயங்கர சந்தோசம், அவள் கேக் வெட்டி முதல் துண்டை எடுத்து கனவனுக்கு ஊட்ட அதற்குள்ளாக அவன் அவளுக்கு ஊட்டியிருந்தான்.
ஜெபாவின் பெற்றோரின் காலில் இருவரும் ஒன்றாக விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
அனுராதா அவளுக்கு அழகான தங்கசெயின் ஒன்றை பரிசளித்தார்.
குட்டீஸ் இரண்டும் சித்திக்கு தனித்தனி கிஃப்ட் குடுக்கவும் மோனல் அழவே ஆரம்பித்துவிட்டாள்,ஜெபா அவளை தோளில் கைபோட்டு பிடிக்கவும் பிரேம் அழகாக போட்டோ எடுத்தான் எல்லாம் முடிந்ததும்.
மோனல் சொன்னாள் இருபது வருசத்திற்கு மேலா தனியாவே இருந்திருக்கேன் பிறந்தநாள் அன்று, கொண்டாடியதே இல்லை.
அனிஷாதான் என் பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்து வைத்தாள்.
எல்லாருக்கும் நன்றி என்று கையெடுத்த கும்பிட அப்படி ஒரு நெகிழ்ச்சி எல்லாருக்கும்.
தங்களது அறைக்குள் வந்ததும் ஜெபாவை இறுக கட்டிப்பிடித்து அவ்வளவு முத்தமிட்டாள் கணக்கில்லாது.
அவன்தான் முடிவில் போதும்டி கன்னம் வலிக்குது என்று சொன்னான்
அதன் பிறகுதான் அவனை விட்டாள்.
தன் மனதிலிருந்து முதன்முதலாக " ஐ லவ் யூ மச்சான் " என சொல்லி அவன்
உதடுகளை தன் இதழால் மூடியிருந்தாள்.
அத்தியாயம்-20
மோனல் அவன் வாயோடு வாயாக ஒட்டி
அவன் இதழ்களை தின்று கொண்டிருந்தாள், அவனது உயரத்திற்கு அதிக நேரம் ஈடு கொடுக்க முடியாமல் விட்டவள் அவன் கண்கள் படிக்கும் மொழியை படிக்கலானாள்.
அவன் அவளை அப்படியே தன்னோடு அணைத்து தூக்கிக்கொண்டான். அவளது அங்கமெல்லாம் அவன் உடலோடு இடுங்கி சுகவேதனைதான் அவளுக்கு.
அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள்.
அப்படியே படுக்கைவரை நடந்தவன்,
அவளை இறக்கிவிட்டு தானும் பக்கத்தில் படுத்துக்கொண்டான்.
எப்படி நம்மளோட சர்ப்ரைஸ் நல்லயிருந்துச்சா என கேட்கவும் அவன் தோளோடு தன் முகத்தை வைத்துக்கொண்டாள் அவள் உடல் குலுங்குவதை வைத்துதான் அவள் அழுகின்றாள் என்று உணர்ந்தவன் அவளின் முதுகைத் தடவிவிட்டவன்.
பெர்த்டே பேபி ஏன் இந்த அழுகை கடந்துப்போனது போனதுதான், அது முடிஞ்சு போனது இப்போ நிஜம் நான் உன் பக்கத்துல இருக்கேன். என்ன கவனி டாலி என்க மெதுவா அவனது முகத்தைப்பார்த்து .
" நான் ஒன்னும் சோகத்துல அழவில்லை
சந்தோசத்துல அழுறேன். "
ஓ அப்படியா என சொன்னவன் அவள் தலையை இன்னும் மார்போடு சேர்த்து இறுக்கி கொண்டான்.
அப்படியே அமைதியாக இருந்ததும் அவன் " ரெம்ப லேட் ஆகிட்டு தூங்குவோம் வா " என படுத்து தூங்கப்போனான்.
மோனல்தான் " தூங்கவா " என சுருதி குறைய கேட்கவும் அவன் என்ன என்று புருவம் உயர்த்தி கேட்டான்.
தூங்க சொல்றீங்க என சினுங்கினவளுக்கு லேசான கோபம் வந்தது.
ஆமா தூங்கதான் சொன்னேன். டயர்டா இருக்கு தூங்கு என சொன்னான்.
அவளுக்கு வருத்தம் நம்மதான் அவரத்தேடியிருக்கோம், அவரு என்ன தேடவேயில்லை போல என திரும்பி படுக்கவும்.
அவள் காலில் எதோ ஊர்வதுபோல தோண காலையிழுக்க போக, பலமாக அழுத்திப் பிடித்திருந்தான் கனவனவன்
என்ன என்று எழும்பி பார்க்க தங்கக்கொலுசு மாட்டிவிட்டிருந்தான்.
ஒரு கால் முடிஞ்சு அடுத்த காலிற்கும் மாட்டிவிட்டவன், இப்போ எழும்பி அவளின் அருகே படுத்தவன்.
அவள் கண்களை பார்த்திருந்தான்.
மெதுவாக கேட்டான் பிடிச்சிருக்கா என்று ரகசிய குரலில். அப்படியே கண்களை மெதுவாக மூடி பிடிச்சிருக்கு என பதிலளித்தாள்.
இன்னும் நெருங்கி அமர்ந்து என்ன பிடிச்சிருக்கு என்ற ஹஸ்ய குரலில் கேட்க
அவள் அவனை சுட்டிக்காட்டி உதட்டசைத்தாள் இந்த மச்சானை என்று.
அவன் " ம்ஹும் "
அவள் " ம்ம்ம் "
அப்படியே அவளது உதடுகளைத்தான் பார்த்திருந்தான் பசியோடு பழங்களை பார்த்திருக்கும் அணில்போல.
அவளுக்குத்தான் அவன் பார்வையின் தீவிரம் தாங்காமல் கண் இமைகளை தாழ்த்தினாள்.
அவனது ஒற்றை விரலைக் கொண்டு தாடையைத் தொட்டு நிமித்தினான்.
என்னோட உயிரில் பாதி என்கிட்ட பேசிச்சு,மறுபாதி உன்னைதேடுது என்று, தேடுனியா ?
மோனல் இரண்டு கைகளையும் விரித்து
ரெம்பத் தேடுனேன் என்றதும் அப்படியே சொல்லிக்கொண்டிருந்த வாயை தன் வாயால் கடித்திருந்தான் அவளின்
நாவின் சுவையையும் சேர்த்து ,
போலிஸ்காரன் புது பள்ளியறை பாடங்களை கற்றுத்தர ஆயத்தமாக வந்திருந்தான்.
பெண்ணவள் எதிர்பாரத அந்த முத்த தாக்குதலை சமாளிக்க அவன் கேசத்தை தன் கரங்கொண்டு பிடித்து அத்த முரட்டு
குதிரையின் கடிவாளமாக வைத்திருந்தாள்.
மிக மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக அவளிதழ்களை விடுவித்தவன்,
மீசைமுடி உரச உரச
காதினில் ரகசியம் பேசு
உன் மார்பு முடிகள்
என் தனங்களோடு விளையாட
உன் கேசம் நான் பற்ற
என் உடலோடு உன் உதடு பேச
ரகசிய கனவுகள் எல்லாம் நீ
நிஜமாக்க வேண்டுமடா!
டாலி என்றவன் அவளின் உடையாக மாற
எப்போதும் அவனின் செயலாக மட்டுமே இருப்பது. இப்போது அவளின் இணக்கம் அவனை ஆச்சர்யப்பட வைத்தது.
பிரிவு எப்போதுமே காதலைக் கொண்டாடுமாம். மோனலின் செயலும் அதைத்தான் நிருபித்தது.
மோனல் அவனைத் தூண்டிக்கொண்டிருந்தாள், நிதானமாக தன் பெண்ணவளை ரசித்து ரசித்து
களவாடினான்.
அவன் ஒவ்வொரு செய்கைக்கும் வெடித்து மலர்ந்தாள், அவளின் தேகம் அவனின் கரங்கள் செய்த மாயையில்
செவ்வானமாக மாறியது ,இன்னும் அவனைத்தேடினாள் ,கனவனை தன் தேகத்திற்குள் ஒளித்துவைக்க முயன்று ,
தோற்றவள் மீண்டும் மீண்டும் முயற்சித்து தோற்க, ஜெபா அவளை ஆழமாகப்பார்த்து தன் வேகத்தை அவளுடலில் காட்டிக் கொண்டிருந்தான்.
அவனது தோளில் மோனலின் நாகத்தின் பதிவு, சகமான இம்சையைத் தாங்கிக்கொண்டான்.
அவளது உடலில் அவன் கட்டிய தாலியும்,கொலுசும் மட்டுமே.
அவனின் ஒவ்வொரு அசைவிற்கும்
அந்த கொலசின் ஒலி. அவனை இன்னும் இயங்கச்சொன்னது.
அவளை கொண்டாடினான் அவளின் பெண்மையை ,அவளது உடலை,அவளது காதலை. அவள் அவனாக ,அவன் அவளாக உயிருக்குள் ஊடுருவினர்.
உயிருக்குள் மட்டுமா உடலுக்குள்ளும்.
தேடலுக்கு கமாபுள்ளி வைத்து தூங்கினர். காலை சிறுபிள்ளைகள் வந்து கதவைத் தட்டி திறக்க முயற்சிக்க
சுனிதாதான் சித்தி தூங்கிட்டிருக்காங்க, வருவாங்க என சமாதானப்படுத்தினாள்..
ஜெபாதான் முதலில் எழும்பியவன் மோனலைப்பார்க்க , அவள் அவனது சட்டயைப்போட்டுக்கொண்டு படுத்திருந்தாள் ,அவனது சட்டை அவளுக்கு தொடை வரை இருந்தது.
அதைப்பார்த்தவன் தொடையில் கிள்ளிவைக்க துள்ளி எழுந்தவள் என்னவென்று திருதிருன்னு முழிக்கவும்,
ஜெபா சிரித்தான்.
ஏன் மச்சான் முள்ளி வச்சீங்க, வலியில் தொடையைத் தடவிக்கொண்டே கேட்க.
அது பார்க்க பளபளன்னு இருந்துச்சா அதான் என்று அவளிடம் விளையாட.
தலையைத் தலையனைக்குள் புதைத்துக்கொண்டு தூங்க முற்பட ,
அடியே என் ஆசை பொம்மை மணியப்பாரு , பிறந்தாநாள் அதுவுமா இப்படித்தூங்குற, எழும்பு ரெடியாகு உனக்கு சேலை வாங்கிட்டு வந்திருக்கேன்
கட்டிட்டு வா என துரிதப்படுத்தினான்.
மோனல் " ஐயோ சேலையா,எனக்கு உடுக்கத் தெரியாது, அதுக்கு பாவடைலாம் வேணும் என்கிட்ட இல்ல ,நான் கட்டமாட்டேன் என படுக்கையில் இருந்துக்கொண்டே சொல்ல , அவளை அப்படியே தூக்கிக்கொண்டு குளியறையின் பக்கத்தில் விட்டான்,அவள் அப்படியே அவனைப் பாவம்போல பார்க்க போய் குளிக்கறியா இல்ல நான் உள்ளவரவா எனக்கேட்க,நானே போறேன்னு போயி குளித்து வெளியேவந்தவளுக்கு ,
புடவையயை எடுத்து கையில் கொடுத்தான், உள்ளாடை முதற்கொண்டு வாங்கியிருந்தான்.
கண்களை அகலவிரித்து எப்படி எனக்கேட்கவும், அவன் அவளது காதில் ரகசியம் பேசினான், அவனைப்பிடித்து தள்ளியவள், அக்காவ வரச்சொல்லுங்களேன் சேலையைக் கட்டனும் என்க,
வெளியே சென்று அவனது அண்ணி சுனிதாவை அழைத்து சொல்லவும், சுனிதா அழகாக கட்டிவிட்டாள்.
வெளிய வரும்போது கண்ணுபட்டிருக்கும் அவ்வளவு அழகாக இருந்தாள்,
அவளுக்கான விருந்து, அது சாப்பிட்டு முடித்ததும்
ஜெபா " நம்ம எங்கயாவது வெளிய போவாமா " என கேட்கவும்,
மோனல் " ஹான்,நம்ம கன்னியாகுமரி போவோமா "
ஜெபா ஒரு மாதிரி குரலில் "கன்னியாகுமரிக்கா " அவ வேற எங்கயோ சொல்லப்போறானு கேட்டவன்,இந்த பெயரக்கேட்டதும்.
எப்படி டாலி இவ்வளவு அறிவோட யோசிச்ச எனக்கேட்கவும்
மோனல் சொன்னா அது நம்மவீட்டு குட்டீஸ்ங்கதான் சொன்னாங்க. அவங்க அங்க நிறையதடவை போயிருக்காங்களாம்,அங்க நல்லாயிருக்குமாம்.
ஜெபா தன்கையால் நெத்தியில அடிச்சாக்கிட்டு, டாலி அவங்க சின்ன பிள்ளைங்கமா அவங்க லெவலுக்குத்தான் சொல்லுவாங்க,நம்ம வேற எங்கயாவது போலாம் சினிமாவுக்கு போவோம்.
வேண்டாம் எனக்கு போட்டிங்க் போகனும் குட்டீஸ் சொன்னாங்க நல்லாயிருக்கும்னு.
அவளுக்கிணங்க வெளியே கிளம்பி வரவும் வீட்ல பெரியவங்க கேட்டாங்க
அவன் சொன்னதும் சிரிப்புடனே சரி என்றனர்.
15 .கி.மீ கூட இருக்காது சட்டென்று காரை எடுத்து அவளைக் அழைத்துச் சென்றான். அதெல்லாம் அவனுக்கு பார்த்து சலித்துப்போன இடங்கள்.
அவளுக்கு ஆச்சர்யமான இடங்கள்.
முதல்ல போட்டிங்க் போவோம் ,இங்க டைமிங்க் உண்டு இல்லனா போகமுடியாது என சொல்லி டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல பயந்தவள் போட்ல ஏறதுக்குள்ள ,அவன் தான் அவள் இடுப்பைபிடித்து தூக்கிவிட்டான்.
முதல் முறை இப்படியான பயணம் ,பயம்
அவனை ஒட்டியே இருந்தாள் அவனின் கரம்பிடித்தே நடந்தாள் ஹப்பா அவனுக்கு எதுவுமே புதிதாய் தோன்றவில்லை.
ஆனால் அவளுக்கு எல்லாமே புதிய அனுபவம். எல்லாம் முடித்து சூரியன் அஸ்தமனம் பார்க்கலாம் என்று அதற்கென்று தனியாக இருந்த இடத்திற்கு அழைத்து சென்று தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.
அந்த மாலை நேரக்காற்றும் மஞ்சள் வெயிலும், சிவப்பும் ஆரஞ்சு நிறவண்ணங்கள் கலந்த அந்த சூரியனும் கண்டு அப்படியே அமர்ந்திருந்தனர்.
அவள் அவனை ஒட்டி உரசி இருக்க அவனுக்குத்தான் ஏதோ மாயம் செய்த உணர்வு .
திரும்பி வரும்போது காரில் மௌனம் மட்டுமே இரண்டுபேரும் அதை உணர்ந்து அனுபவித்தனர் அந்த நேரத்தை.
சிட்டிக்குள் வரும்போது காரை நிறுத்தி
கடைக்குப்போகனும் என்று அடம்பிடித்து அவனைக்கூட்டி சென்றவள் நிறைய வாங்கினாள் இப்போது கார்டு அவள் குடுத்து பணத்தை செலுத்த அவன் முறைத்து பார்க்க " இது நான் சம்பாதித்தது என் குடும்பத்திற்கு செலவளிக்கிறேன் உங்களுக்கென்ன
என்று கேட்டு சிரித்தாள் கல்யாணமாகி ஆறுமாசத்துல ரெம்ப முன்னற்றேம்மா,ம்ம் நடத்து நடத்து " என அப்படியே விட்டுட்டான்.
ஜெபாவுக்கு மட்டும் ஒன்னுமே வாங்கவில்லை. வேற வீட்ல இருக்க நண்டு சிண்டுக்கு கூட துணி ,இன்னும் நிறைய வாங்கியவள் வந்து அத்தனை பேருக்கும் எல்லாத்தையும் கொடுத்துவிட்டு ,உண்டு முடித்து தங்களது அறைக்குள் வந்ததும் டயர்ட்ல இரண்டும் படுத்து நல்ல தூக்கம்.
காலையில் எழும்பி மதுரைக்கு கிளம்பனும் என்று அவளை எழுப்பி கிளம்பசொன்னான் அப்போதுதான் தெரியும் அவளுக்கு, அவளையும் உடன் அழைத்து செல்கிறான் என்று.
மோனல் சந்தோசத்தோடு கிளம்பினாள்.
அவன் குளிக்கும் போது தான் பார்த்தான் தன் இடது கையில் தங்ககாப்பு மாதிரியான ஒன்று நல்ல கணமானது, ஆவன் கையில் மாட்டியிருந்தது
பார்த்தவுடனே தெரிஞ்சது அது இங்க வாங்கியிருக்க வாய்ப்பே இல்லை என.
மனசுகுள்ள அவ்வளவு குறுகுறுன்னு சந்தோசம்.
அவசரஅவசராமா குளித்து வெளியே வந்து பார்க்க அவள் அனுராதாவுடன் கிட்சன்ல நின்றிருந்தாள் இப்போது ஒன்றும் கேட்கமுடியவில்லை.
அப்படியே எல்லாரும் சாப்பிட உட்காரவும்
ஜெபாவின் அண்ணன் ஜீவா கேட்டான்
என்னடா புதுசா கையில காப்பு எல்லாம்
உன் வேலைக்கு சரிப்படாதுன்னு சொல்லுவ. பாப்பா தந்த பிரேஸ்லட்டையே கப்போர்டுல வச்சிருக்க.
ஜெபா மோனலைத்தான் பார்த்தான் நீ தான் இதுக்கு பதில் சொல்லனும் என்று.
மோனல் " அது ப்ரேஸ்லெட்னா கையில இருந்து அந்துரும் அவங்க வேலைக்கு சரியா இருக்காது ,அதுதான் காப்பு வாங்கினேன் "
ஓ உன்னோட பரிசா நல்லா இருக்கு. எதுக்கும் பாப்பா வரும்போது பார்த்து இருந்துக்கோ அவா கேள்விகேட்டா பதில் சொல்ல. என்ன சமாளிச்ச மாதிரி அவள சமாளிக்க முடியாது தம்பி என்று சொல்ல ஜெபா அசடாக ஒரு சிரிப்பு சிரிக்க , மொத்த குடும்பமும் அவனை கேலி செய்து ஒரு வழியாக்கிவிட்டனர்.
மெதுவாக மோனலை தன்னுடன் அழைத்து போவதை சொல்ல, அனுராதா கொஞ்சம் பயந்தார்,ஆனலும் போயிட்டு வாங்க என அனுமதித்தார்.
மோனலை தனியா அழைத்து அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தனர், கார் புக் செய்து கிளம்பினர் இருவரும். வழியில் ஒன்றும் பேசமுடியவில்லை
மதுரை போய் சேர்ந்ததும் அவளை வீட்டில் விட்டவன் கடமை அழைக்கிறது என்று போய்விட்டான். அங்கு ஏற்கனவே வீட்டை தயார் செய்துதான் வைத்து இருந்தான்.
அவன் வர்றவரைக்கும் என்ன செய்ய வெளியப்போகலாம் என்றால் தமிழ் பேசத்தான் தெரியும் எழுதவாசிக்கத் தெரியாது என்னத்த வாசிச்சு எங்கப்போக.... என யோசித்தவள் வாய்தான் இருக்கே எனக்கேட்டு கேட்டு போயி எல்லாம் வாங்கிட்டு வந்து சமையல் செய்து வைத்துக் காத்திருந்தாள்.
ஜொபா இரவு நேரம் அவசரவசரமாக வந்து அவளை வெளியப்போயி சாப்பிட்டுவருவோம் என்று சொல்ல அவள் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக சமையல் கட்டிற்கு சென்று எல்லாம் எடுத்து வைத்துவிட்டு அமரவும் அவளைத்தேடி வந்தவன் கண்டது சாப்பாட்டைத்தான். ஒரு நிமிஷம் திணறி விழித்தவன் நீ எப்படி எல்லாம் வாங்குன அதவிட எப்படி சமைச்ச என்று கேட்கவும். தன் இடுப்பில் கைவைத்து அவனை முறைத்து நின்றாள்.
மோனல் " நல்லாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் வீட்லதான் சாப்பிடனும். உட்கருங்க என அதட்டவும் "
உட்கார்ந்தவன். " என்னடி ரெம்ப மிரட்டுற போலிஸ்காரனையே "
மோனல் " எனக்கு நீங்க போலிஸ் இல்ல" என மெதுவாக சொல்லிக்கொண்டு அவளும் அமர்ந்து சாப்பிட்டாள் அவன் நன்றாகவே சாப்பிட்டான்.
எப்பவுயே ஜெபாவோட மேனரிசம் அவளுக்கு ரெம்ப பிடிக்கும்,இப்போது
அந்த கையின் காப்பை அடிக்கடி ஏத்திவிட்டுக் கொண்டான்.
தூங்கப்போகும்போது உடை மாற்றி வந்தவன் அவளை அருகில் அழைத்து
" இப்போ சொல்லு இந்த காப்பு நம்ம கல்யானத்திற்கு பிறகு வாங்கல எனக்கு நல்லாத் தெரியும் நீ அப்போ அந்த மனநிலையில இல்லை இது எப்போ வாங்கின சொல்லு "
மோனல் " என் முதல் மாத சம்பளத்துல " என்று சொன்னதும் சாய்ந்து படுத்திருந்தவன் சட்டென்று எழும்பி உட்கார்ந்தான்.
" என்னடி சொல்ற அப்பவேவா..எப்படி "
மோனல் " அது அனிஷா படிக்கும் போது ஒரு தடவை சொன்னா உங்களுக்கு பிரேஸ்லோட் கிஃப்ட் தந்ததுக்கு போடமுடியாதுன்னு சொன்னீங்களாம்.
என்னோட வேலைக்கு அது சரிவராதுன்னு அதான். அப்போவே அவாகிட்ட சொன்னேன் அடுத்த பிறந்த நாளுக்கு காப்பு வாங்கிக்கொடுக்க.
அதுக்குள்ள அவ சூழ்நிலை மாறிட்டு.
உங்ககிட்ட குடுக்க முடியுமா முடியாதானு தெரியாது, ஆனாலும் நான் வாங்கி வச்சேன் அப்போ குடுக்கமுடியல "
அவளைத்தான் கண்ணெடுக்காமல் பார்த்திருந்தவனின் உள்ளத்தில்
இந்த மாசுமருவற்ற அன்பிற்கு நான் தகுதியா என யோசித்துக் கொண்டான்.